விசுவாசத்தில் இளமையான அஜீத்... புது ஜோடி... ரசிகர்களை கூல் செய்யும் சிவா
விசுவாசம் படத்தில் உடலை குறைத்து இளமையான தோற்றத்திற்கு மாறப்போகிறார் அஜீத். அவருக்கு ஜோடியாக இளமையான நாயகியை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
சென்னை: விசுவாசம் படத்திற்காக அஜீத் தனது கெட்டப்பை முழுவதுமாக இளமையான தோற்றத்திற்கு மாற்றிகொண்டிருக்கிறார். இந்த படத்தில் அஜீத்திற்கு இளமையான புது கதாநாயாகியை ஜோடியாக நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
வீரம், வேதாளம், விவேகம் இப்போது விசுவாசம் என சிவா இயக்கத்தில் வரிசையாக நடித்து வருகிறார் அஜீத்.
நரைத்த தலை, குண்டானவராக வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜீத்தை ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. சிவாவின் படங்களில் இனி நடிக்க வேண்டாம் தல என்றே கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பெப்பர் லுக் மட்டுமே
விசுவாசம் படத்தில் தனது உடம்பை குறைத்து இளமையான தோற்றத்தில் நடிக்கப் போகிறாராம் அஜீத். போஸ்டர்களும் இதை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகி வருகின்றன.

இளமையான கதாநாயகி
அஜீத்துக்கு தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன், அனுஷ்கா என பலர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்திலும் தமன்னா அல்லது அனுஷ்கா நடிக்கலாம் என பேசப்பட்டது. அஜீத் ரசிகர்களோ புது நாயகியோடு ஜோடி சேருங்கள் தல என்று கோரிக்கை வைக்கவே இளமையான நாயகியை தேடி வந்தனர்.

புது ஜோடி வேணும் தல
விசுவாசத்தில் கீர்த்தி சுரேஷ்தான் அஜீத் ஜோடி என்றும் பேசப்படுகிறது. ஏற்கனவே விஜய், சூர்யா என்று ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், இனி அஜீத் உடன் ஜோடி சேருவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ரசிகர்கள் விசுவாசம்
விசுவாசம் என்ற இந்தத் தலைப்பை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று இயக்குநர் சிவா இப்போது விளக்கம் கொடுத்துள்ளார். தன்னை உயிராக நேசிக்கும் ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என அஜீத் அடிக்கடி கூறுவாராம். எனவே புதிய படத்திற்கு விசுவாசம் பெயர் வைத்ததாக கூறியுள்ளார். எப்படியோ இந்த முறையாவது ரசிகர்களுக்கு பிடித்த அஜீத்தை காட்டுங்க சிவா.


Click it and Unblock the Notifications