அப்படியே விஜே சித்து போல் இருக்கும் கீர்த்தனா.. யாரோட பேத்தி தெரியுமா.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: மறைந்த நடிகை சித்ரா போன்று இருக்கும் கீர்த்தனா தினகர் யார் என்பது குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.
நடிகை சித்ராவின் மரணம் சின்னத்திரை வட்டாரம் மட்டுமின்றி சினிமாத்துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்த சித்ரா, கணவர் ஹேமந்தின் சந்தேகப் புத்தி மற்றும் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

விஐபிக்களுக்கு தொடர்பு
இருந்த போதும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாள்தோறும் ஒரு தகவல் பரவி வருகிறது. சித்ராவின் மரணத்தில் விஐபிக்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் நடிகர் ரக்ஷன் கொடுத்த டார்ச்சர் என்றும் தகவல்கள் பரவின.

சித்துவின் வீடியோக்கள்
இந்நிலையில் நடிகர் ரக்ஷன், தான் வீடியோவை வைத்து சித்ராவை மிரட்டியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். சித்ரா கடைசியாக பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அவர் அளித்த நேர்க்காணல்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முல்லையாக பிரபலம்
சித்ரா விஜேவாக இருந்ததை காட்டிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த முல்லை கேரக்டரின் மூலமே பெரும் பிரபலமானார். முல்லை கேரக்டரில் அப்பாவி மருகளாக அசத்தி வந்தார் விஜே சித்து.

அச்சு அசல் சித்ரா போன்று
அவரது மரணத்தை தொடர்ந்து, முல்லை கேரக்டரில் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வரும் நடிகை காவ்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் கீர்த்தனா தினகர் என்பவரின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் கமெண்ட்
முல்லை கேரக்டர் சித்ரா போன்று போட்டோ ஷுட் நடத்திய போட்டோக்களை ஷேர் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். பலரும் அவரது போட்டோக்களை பார்த்து விஜே சித்து போன்றே இருப்பதாக கமெண்ட் பதிவிட்டு வந்தனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்
இந்நிலையில் கீர்த்தனா தினகர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாஃப்ட்வேர் இன்ஜீனியரான கீர்த்தனா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2ல் பங்கேற்றது தெரிய வந்துள்ளது.

ஷண்முக சுந்தரியின் பேத்தி
மேலும் இவர் விஜே சித்துவுக்கு ஏற்கனவே பரிட்சயமானவர் என்றும் தெரியவந்துள்ளது. அதோடு கீர்த்தனா பழம் பெரும் நடிகையான ஷண்முக சுந்தரியின் பேத்தி என்பதும் தெரியவந்துள்ளது. பழம் பெரும் நடிகையான ஷண்முக சுந்தரி பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

பாட்டியுடன் இருக்கும் போட்டோ
மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவுக்கு அம்மாவாக நடித்திருப்பார். மேலும் மெட்டி ஒலி, கோலங்கள், அகல்யா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார் ஷண்முக சுந்தரி. ஷண்முக சுந்தரியின் ஐந்தாவது மகளான செல்வியின் மகள்தான் இந்த கீர்த்தனா என்றும் அவர் குழந்தையாக அவரது பாட்டியுடன் இருந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











