டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்.. இவருக்குதான் வாய்ப்பா? இரண்டு சுற்றுகளில் லீடிங் யாருன்னு பாருங்க!
சென்னை: டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் யார் லீடிங்கில் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி ஃபைனல்ஸை சந்திக்க உள்ளது. இதனால் இரண்டு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ளன.
அடுத்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் இந்த வாரம் அனைத்து ஹவுஸ்மேட்ஸும் நாமினேஷனுக்கு வந்துள்ளனர்.

எவிக்ஷனில் இருந்து தப்பிக்கலாம்
இந்நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் ஆரம்பித்துள்ளன. இதில் அனைத்து போட்டிகளின் இறுதியில் அதிக மதிப்பெண் பெற்று டிக்கெட் டூ ஃபினாலேவை பெறும் நபர் இந்த எவிக்ஷன் புராசஸில் இருந்து தப்பித்து நேரடியாக பினாலே வாரத்திற்குள் நுழைந்து விடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற தீவிரம்
அவருக்கு அடுத்து வாக்கு எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் நபர் வெளியேற்றப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருமே நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளதால் எப்படியாவது இந்த டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்
இதற்கான முதல் டாஸ்க்காக தண்ணீர் நிரப்பப்பட்ட பலூக்களை ஆணிகள் உள்ள பெடஸ்டியனுக்கு மேல் பிடித்தப்படி நிற்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் கையில் பலூனை தூக்கிப்பிடித்தப்படி நின்றனர் போட்டியாளர்கள்.

பாலாஜியும், ரியோவும்..
பலூன் பிடித்திருக்கும் கையை இறக்கினால், கீழே உள்ள ஆணி படுக்கையில் பட்டு பலூன்கள் உடைந்து விடும். மேலும் பலூனை பிடித்திருக்கும் கையை மடக்கவோ ஏற்றவோ இறக்கவோ கூடாது என்றும் கண்டிஷன் போடப்பட்டது.

பாலா வெற்றி
இந்த டாஸ்க்கில் ஷிவானி, கேபி, ரம்யா ஆகியோ அடுத்தடுத்து பலூனை தூக்கி பிடிக்க முடியாமல் அவுட்டாகினர். அவர்களை தொடர்ந்து ஆரி மற்றும் சோம் அவுட்டாகினர். ஆனால் ரியோவும் பாலாஜியும் கடைசி வரை தாக்குப்பிடித்து நின்றனர்.

மரத்துண்டு டாஸ்க்
இதில் முதல் இடத்தை பாலாஜியும் இரண்டாவது இடத்தை ரியோவும் பெற்றனர். மூன்றாவது இடத்தை ஆரியும் பிடித்தனர். இதனை தொடர்ந்து இரண்டாவது டாஸ்க்காக பொருத்தமான மரத்துண்டை தலையில் வைத்து வுட்டன் ஃபிரேமுக்குள் நிற்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட.

ரம்யா வெற்றி
இதில் நீண்ட நேரம் தலையில் உள்ள மரத்துண்டு விழாமல் நிற்கும் போட்டியாளரே வெற்றியாளர் என்றும் கூறப்பட்டது. இதில் முதல் இடத்தை ரம்யாவும், இரண்டாவது இடத்தை ரியோவும் பெற்றனர்.

ரியோ டாப்
இரண்டு டாஸ்க்குகளின் அடிப்படையில் ரியோ 12 பாயிண்டுகளுடன் முதல் இடத்திலும் ரம்யா 10 பாயிண்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் பாலாஜி மற்றும் ஆரி தலா 9 பாயிண்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











