சார்பட்டா பரம்பரை படத்தில் டாடியின் மனைவியாக நடித்த மிஸ்ஸிம்மா... யார் தெரியுமா?!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் மிஸ்ஸிம்மாவாக நடித்த பிரியதர்ஷினி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் ஓடிடி பிளாட்ஃபார்மில் கடந்த மாதம் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், ஜான் கோக்கென் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

குத்துச் சண்டையை மைய்யப்படுத்தி
1970களில் வட சென்னையில் இருந்த சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரைக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

அப்படியே காட்டப்பட்ட கட்சி பெயர்கள்
படத்தில் அந்தக்காலக் கட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அப்படியே காட்டப்பட்டிருந்தது. கட்சி பெயர்கள், கட்சி தலைவர்களின் பெயர்கள் என எதுவும் மாற்றப்படாமல் அப்படியே காட்சிப் படுத்தப்பட்டிருந்ததும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கேரக்டராகவே வாழ்ந்த நட்சத்திரங்கள்
அடித்தட்டு மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் அனல் பறக்கும் பல வசனங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய் என பலரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தனர்.

டாடியாக வாழ்ந்த ஜான் விஜய்
டாடி கேரக்டரில் நடித்த ஜான் விஜய்க்கு இந்தப் படம் பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது. வில்லன் கதாப்பாத்திரத்தில் இதுவரை மிரட்டி வந்த ஜான் விஜய்க்கு இந்தப் படத்தில் குணச்சித்திர கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலோ இந்தியன் நபராக பட்லர் இங்கிலிஷில் பட்டையை கிளப்பியிருந்தார்.

பெத்த தாயை அடிக்கிறீயா..
அதிலும் கபிலனாக நடித்த ஆர்யாவை ஊக்கப்படுத்தும் இடங்களிலும் சரி, அவருக்கு ஆதரவாக மற்றவர்களிடம் பரிந்து பேசும் போதும் சரி டாடியாகவே வாழ்ந்திருந்தார். கபிலனுக்கு பிடித்த பாக்ஸிங்கை அவரது அம்மா தடுக்கும் போது அவருக்கு எதிராகவும், அம்மாவிடம் கபிலன் குடி போதையில் தகராறு செய்யும் போதும் பெத்த தாயை அடிக்கிறீயா என அவரை அடித்து தள்ளும் போது நியாமான ஒரு நபரா அப்ளாஸை அள்ளினார்.

டாடியின் மனைவி மிஸ்ஸிம்மா
இந்நிலையில் அவருக்கு மனைவியாக ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக மிஸ்ஸிம்மா கேரக்டரில் நடித்த பிரியதர்ஷினி ராஜ்குமார் குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் தமிழ் சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சீரியல் சினிமா அத்துப்படி
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பிரேமி என்ற சீரியலில் மூலம் அறிமுகமானார். இந்த சீரியலில் ரேணுகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியதர்ஷினி. கொங்கனி மற்றும் காஷ்மிரி ஆர்ஜினை சேர்ந்தவர். இடையில் சினிமாவில் இருந்து விலகி ஆஸ்திரேலியாவில் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய பிரியதர்ஷினி, 2012ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவுக்கு கம் பேக் ஆனார்.

முன்னணி நட்சத்திரங்களுடன் பணி
தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அனாமிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் பிரியதர்ஷினி. ரெமோ, கவன், பீப், ராகடம், மிஸ்டர் சந்திரமவுலி, தனிமுகன், நீயா 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கவன் படத்தில் பாவனாவாக..
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவன் படத்தில் பாவனா என்ற கேரக்டரில் நடித்தார். அவரது கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் பிரியதர்ஷினி. மேலும் பறவைகள், நிலா, இறகை போலே, The Masculinity, The Call, மாதவி உள்ளிட்ட பல குறும்படங்களிலும் நடித்துள்ளார் பிரியதர்ஷினி.

மீண்டும் ரசிகர்கள் மத்தியில்..
சரஸ்வதி கல்வி கலாச்சார மற்றும் அறக்கட்டளையை நடத்தி வரும் பிரியதர்ஷினி, பரதநாட்டியம் நடனமும் கற்றவர் ஆவார். சார்பட்டா பரம்பரை படத்தில் டாடியாக நடித்த ஜான் விஜய்க்கு மனைவியாக ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார்.


Click it and Unblock the Notifications











