அட ஆச்சரியமா இருக்கே.. இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் இவங்கதான்..!
சென்னை: யாஹூவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ஒவ்வொரு வருடமும் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலை, யாஹூ இணையதளம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 2020 ஆம் ஆண்டு யாஹுவில் அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
அதில், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் முதலிடத்தில் இருக்கிறார். நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இளம் நடிகர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

வாரிசு அரசியல்
பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்தன. இதனால் சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முதலிடம் பிடித்தார்
இந்நிலையில், 2020ம் ஆண்டு இந்தியாவில் யாஹுவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சுஷாந்த் சிங்கின் காதலியுடம் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். யாஹுவில் அதிகம் தேடப்பட்ட பெண் பிரபலம் இவர்தான்.

அமிதாப் பச்சன்
ராகுல் காந்தி 4வது இடத்திலும், மத்திய அமைச்சர் அமித் ஷா 5 வது இடத்திலும், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே 6 வது இடத்திலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 7வது இடத்திலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 8வது இடத்திலும், அமிதாப் பச்சன் 9வது இடத்தில் உள்ளனர். அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் ரியாவுக்கு, கங்கனா, தீபிகா படுகோன், சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











