இந்தியன் 2-வுக்கு இசை யார்? இந்த முறை ரஹ்மான் இல்லையா?
சென்னை: இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாஸன் நடிப்பார் என சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாக இருந்தது. இப்போது படம் லைகாவுக்கு கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஷங்கர் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்தான். அந்நியன் மற்றும் நண்பன் படங்களுக்கு மட்டும்தான் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.

ஷங்கர் மற்றும் கமலுடன் அனிருத்துக்கு இதுதான் முதல் படம்.
ரஹ்மான் இல்லாத மூன்றாவது ஷங்கர் படமாக இந்தியன் 2 உருவாகிறது. இந்தியன் முதல் பாகத்தில் மிகப் பெரிய பலம் ரஹ்மானின் இசை மற்றும் பாடல்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











