ப்ரீத்தி ஜிந்தாவைத் தெரியும்... யார் இந்த நெஸ் வாடியா?

By Shankar

தனது முன்னாள் காதலரும், இந்நாள் கிரிக்கெட் வியாபார கூட்டாளியுமான நெஸ் வாடியா மீது இரு தினங்களுக்கு முன் ப்ரீத்தி ஜிந்தா திடீரென பாலியல் தொந்தரவு புகார் கொடுத்து பரபரப்பு கிளப்பினார்.

மே 30ம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் வைத்து தனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என இரு வாரங்கள் கழித்து புகார் தெரிவித்திருந்தார்.

இந்த திடீர் புகார், பரபரப்பைக் கிளப்பினாலும், யாருக்கும் ஆச்சர்யத்தைத் தரவில்லை. மாறாக யார் இந்த நெஸ் வாடியா? என்ற கேள்வியை எழுப்பியது.

ஜின்னாவின் கொள்ளுப் பேரன்

ஜின்னாவின் கொள்ளுப் பேரன்

நெஸ் வாடியாவின் குடும்பப் பிண்ணனி பெரியது. இவரது கொள்ளுத் தாத்தா முகம்மது அலி ஜின்னா. முஸ்லீம் லீக்கை உருவாக்கி, பாகிஸ்தான் என்ற தனி நாடு உதயமாகக் காரணமானவர். ஜின்னாவின் மகள் டினா ஜின்னாவைத்தான் நெஸ் வாடியாவின் தாத்தா நெவில் வாடியா திருமணம் செய்து கொண்டார்.

நுஸ்லி வாடியா

நுஸ்லி வாடியா

நெஸ் வாடியாவின் தந்தை பெயர் நுஸ்லி வாடியா. இவர்தான் பாம்பே டையிங் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைவர். ஒரு வகையில் டாடா குழும நிறுவனர் ஜேஆர்டி டாடாவின் தூரத்து உறவினர் நெஸ் வாடியா.

கோ ஏர்

கோ ஏர்

இந்தியாவின் 5 வது பெரிய விமான நிறுவனமான கோ ஏர் வாடியா குடும்பத்துக்குச் சொந்தமானதுதான்.

44 வயதில்...

44 வயதில்...

44 வயதாகும் நெஸ் வாடியா, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பொரேஷனின் நிர்வாக இயக்குநராகவும், பாம்பே டையிங் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராகவும், பிரிட்டானியா நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராகவும் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

பஞ்சாப் அணி..

பஞ்சாப் அணி..

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இரண்டு உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார் நெஸ்வாடியா. இதன் இன்னொரு உரிமையாளர்தான் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

5 ஆண்டு உறவு

5 ஆண்டு உறவு

நெஸ் வாடியாவும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் நண்பர்களாக அறிமுகமாகி காதலர்களாயினர். அதிக முறை மீடியாவை ஆக்கிரமித்தது இவர்களின் காதல் செய்திகளே. 2005-ம் ஆண்டு திருமணம் செய்யாமலேயே இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். 2009-ல் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.

ப்ரீத்தியுடன் ப்ரியமாக இருந்தபோது..

ப்ரீத்தியுடன் ப்ரியமாக இருந்தபோது..

2008-ல் ப்ரீத்தி ஜிந்தாவும் நெஸ் வாடியாவும் இணைந்து வாழ்ந்த காலத்தில் இருவரும் சேர்ந்து பஞ்சாப் அணியை வாங்கினர். உறவில் பிரிந்தாலும், கிரிக்கெட் வியாபாரத்தில் பிரியாமல் தொடர்ந்தனர்.

வேறு பெண்ணுடன்..

வேறு பெண்ணுடன்..

இந்த நிலையில் நெஸ் வாடியாவுக்கு வேறு பெண்ணுடன் உறவு இருப்பது செய்திகளில் அடிபட ஆரம்பித்தது. இது ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மிகவும் ஆத்திரமூட்டியது. இந்த நேரத்தில்தான் வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதிக் கொண்டிருந்த மேட்சின்போது, ப்ரீத்திக்கும் வாடியாவுக்கும் மோதல் ஏற்பட்டது. அதை, செக்ஸ் தொந்தரவு வழக்காக ப்ரீத்தி ஜிந்தா போலீசுக்கு கொண்டு செல்ல, நெஸ் வாடியா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X