சிம்புவின் புது ஜோடி என கிசுகிசுக்கப்படும் இளம் நடிகை.. யார் இந்த நிதி அகர்வால்? பாவம் கூகுள்!
சென்னை: கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பூமி மற்றும் ஈஸ்வரன் என இரு படங்கள் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர் தான் இளம் நடிகை நிதி அகர்வால்.
எதிர்பார்த்த அளவுக்கு இரு படங்களும் பெரிதாக ஓடவில்லை என்றாலும், சென்னையில் நிதி அகர்வாலுக்கு திடீரென ரசிகர்கள் கோயில் கட்டி பூஜை நடத்திய புகைப்படங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலாக நடிகர் சிம்பு விரைவில் இவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என கிசுகிசுக்கள் வலம் வரத் தொடங்கி உள்ளன.

யார் இந்த நிதி அகர்வால்
1993ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி ஐதராபாத்தில் பிறந்த நடிகை நிதி அகர்வாலுக்கு தற்போது 28 வயதாகிறது. பிறந்தது ஆந்திராவில் என்றாலும் வளர்ந்தது பெங்களூருவில் தான். ஆனால், இவரது குடும்பமோ இந்தி பேசும் மார்வடி இனத்தை சேர்ந்தவர்கள். அதன் காரணமாக இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என அனைத்துமே நிதி அகர்வாலுக்கு அத்துப்படி.

மாடல் அழகி
2014ம் ஆண்டு நடைபெற்ற யமஹா ஃபேசினோ மாடல் அழகி போட்டியில் இறுதிச்சுற்று வரை சென்ற ஃபைனலிஸ்ட்டான நிதி அகர்வால் 2017ம் ஆண்டு இந்தியில் டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியான முன்னா மைக்கேல் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆனார்.

நாக சைதன்யா படத்தில்
இந்தி ஹீரோயினுக்கு தென்னிந்தியாவில் பெரிய மார்க்கெட் ஓப்பனாகி வரும் நிலையில், முன்னா மைக்கேல் படத்தில் இவர் நடிப்பை பார்த்து விட்டு நாக சைதன்யா மற்றும் மாதவன் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான சாவ்யாசாச்சி எனும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் நிதி அகர்வால். தொடர்ந்து மிஸ்டர் மஜ்னு, ஐ ஸ்மார்ட் சங்கர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிதி அகர்வால் கடந்த ஆண்டு கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

இரண்டு லட்டு
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒடிடியில் ஜெயம் ரவி நடித்த பூமி படத்திலும் தியேட்டரில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் படத்திலும் நிதி அகர்வால் தான் ஜோடி. கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு படங்களும் பெரிய ஹிட் அடிக்காத நிலையில், நிதி அகர்வாலுக்கு அதிக அளவிலான தமிழ் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மாங்கல்யம் தந்தூனானே
ஆனால், ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடி போட்டு நிதி அகர்வால் நடனமாடிய "மாங்கல்யம் தந்தூனானே" பாடல் 188 மில்லியன் வியூஸ் கடந்து மிகப்பெரிய ஹிட் ஆனது. விரைவில் 200 மில்லியன் வியூக்களை இந்த சூப்பர் ஜோடி நடனடிமாடிய வீடியோ பாடல் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அகர்வாலுக்கு கோயில்
பாலிவுட், டோலிவுட்டில் கலக்கி வந்த நிதி அகர்வால் கோலிவுட்டில் பூமி, ஈஸ்வரன் என இரண்டு படங்கள் மட்டுமே நடித்த நிலையில், சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் திடீரென கோயில் ஒன்றை உருவாக்கி, அதில் நிதி அகர்வாலின் திருவுருவ சிலையை வைத்து பாலாபிஷேகம் செய்த புகைப்படங்களை பார்த்து நிதி அகர்வாலே ஷாக்காகி ரசிகர்கள் அன்புக்கு நன்றி தெரிவித்தார்.

சிம்புவை கட்டிக்கப் போறாரா?
38 வயதாகும் நடிகர் சிம்புவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக திருமணம் செய்ய பெண் தேடி வரும் நிலையில், சிம்புவின் வீட்டிலேயே நிதி அகர்வால் தங்கி வருகிறார் என்கிற ஷாக்கிங் தகவல் சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது. வெகு விரைவிலேயே நடிகர் சிம்பு நிதி அகர்வாலை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை சிம்புவின் தரப்பு இதை ஏற்கவோ மறுக்கவோ இல்லை.
Recommended Video

தேடும் ரசிகர்கள்
நிதி அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15.9 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என படங்களில் பிசியாக நடித்து வரும் நிதி அகர்வால் சிம்புவை காதலிக்கிறார் என கிசுகிசுக்கள் எழுந்த நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் யார் இந்த நிதி அகர்வால் என தேடி கூகுளை பாடாய்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











