ஆத்தி.. யாருப்பா நீ.. அத்தனை ஹீரோயின்களுடன் இப்படி பழகுற.. பார்க்கும் போதே பொறாமையா இருக்கே!
சென்னை: ஹாலிவுட் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை அத்தனை நடிகைகளுடன் அசால்ட்டாக பழகி வரும் ஒரு பிரபலத்தை பற்றித் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகளுடன் கட்டி அணைத்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்தே யாருடா நீ? என்னடா பண்ற? என்றே பொறாமையுடன் கேட்கத் தூண்டும்.
அந்த அளவுக்கு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ள Orry எனப்படும் Orhan Awatramani என்ன வேலை செய்கிறார். ஏன் பிரபலங்கள் இவரை பெஸ்ட்டியாக வைத்துள்ளனர் என்பதை கேட்டால் கண்டிப்பாக ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

நடிகைகளுடன் அப்படியொரு நெருக்கம்: ஓரி என செல்லமாக அழைக்கபடும் இந்த நடிகர் பாலிவுட் நடிகர் எல்லாம் கிடையாது. ஆனால், அனைத்து பாலிவுட் நடிகைகளுடனும் கிம் கர்தாஷியன் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களுடனும் அந்தளவுக்கு நெருக்கமாக இவர் பழகி வரும் நிலையில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் பலரையும் பொறாமைக் கொள்ளச் செய்கிறது.
ஜான்வி கபூர் நண்பர்: நடிகை ஜான்வி கபூரின் பாய் ஃபிரெண்ட் என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு வந்தார் ஓரி. இருவரும் அந்தளவுக்கு நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் ஆரம்பத்தில் வெளியானது தான் அதற்கு காரணம். ஆனால், அதன் பின்னர் பல நடிகைகளுடனும் ஓரி அதே போல இருப்பதை பார்த்த ரசிகர்கள் யாருய்யா நீ என கேள்வி எழுப்ப கிளம்பி உள்ளனர்.
யாரு இந்த ஓரி: ஹாலிவுட் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை இப்படி பச்செக்கென ஒட்டிக் கொண்டு இவருடன் போஸ் கொடுத்து வரும் நிலையில், அதற்கு காரணமே இவர் ஒரு திறமையான ஃபேஷன் மார்க்கெட்டிங் நபர் என்பது தானாம். இளம் நடிகைகளை இன்ஸ்டாகிராமில் உச்சத்துக்கு கொண்டு செல்லும் வேலைகளை கச்சிதமாக இவர் செய்து வருவதும், ஃபேஷன் துறையில் பல நடிகைகளுக்கு பக்காவாக திட்டங்களை வகுத்து கொடுக்கும் வேலைகளை செய்தே இவரும் ஒரு செலிபிரிட்டி ஆகி உள்ளார்.
கோடிக்கணக்கில் சம்பளம்: நடிகைகள் மற்றும் பிரபல நடிகர்களுக்கு மார்க்கெட்டிங் மேனேஜராக ஐடியாக்களை கொடுத்தே கோடிக் கணக்கில் இந்த ஓரி சம்பாதித்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











