யசோதா படத்தில் நடிகை சமந்தாவுடன் ஜோடி போடும் நடிகர் யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: யசோதா படத்தில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் நடிகை சமந்தாவும் அவரது காதல் கணவருமான நாக சைதன்யாவும் விவாகரத்தை அறிவித்தனர். இதனை தொடர்ந்து சினிமாவில் செம பிஸியாகி விட்டார்.

யசோதா படத்தில்
முதல் முறையாக ஹாலிவுட் படத்தில் கமிட் ஆகியுள்ளார் சமந்தா. இந்நிலையில் யசோதா என்ற மல்ட்டிலிங்குவல் படத்திலும் நடிகை சமந்தா கமிட்டாகி உள்ளார். இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மலையாள நடிகர்
இந்நிலையில் இந்தப் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மலையாள சினிமாவில் பிரபலமாக உள்ள உன்னி முகுந்தன் யசோதா படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தனக்கான இடத்தை பிடிக்கவுள்ளார்.

லீடிங் ரோலில் சமந்தா..
இந்தப் படத்தில் முதல் முறையாக நடிகை சமந்தாவுடன் ஜோடியாக நடிக்கிறார் உன்னி முகுந்தன். யசோதா படம் கதாநாயகியை மைய்யப்படுத்திய கதைக்களத்தை கொண்டுள்ளது. இந்தப் படத்தில் சமந்தா லீடிங் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏற்கனவே தெலுங்கில்
இப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைக்கிறார். யாசோ திரைப்படத் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி மொழியில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே உன்னி முகுந்தன் தெலுங்கில் 2016ஆம் ஆண்டு வெளியான ஜனதா கரஜ் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து அனுஷ்கா ஷெட்டியுடன் பாகமதி படத்திலும் அவர் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு ரிலீஸ்
மேலும் தமிழில் தனுஷின் சீடன் படத்திலும் நடித்துள்ளார் உன்னி முகுந்தன். உன்னி முகுந்தன் தற்போது மலையாள மொழியில் 12த்து மேன், புரோ டாடி, மெப்படியான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மெப்படியான் படம் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











