தளபதி 66 படத்தின் ஹீரோயின் யார்? இன்றைய டாப் 5 பீட்டிஸில்!

சென்னை: விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் ஹீரோயின் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் கூறியிருக்கிறார் பிகே.

சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

சொந்தக் குரலில் டப்பிங்

சொந்தக் குரலில் டப்பிங்

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோ குறித்த தகவலை கூறியிருக்கிறார் பிகே. அதாவது நடிகை த்ரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த த்ரிஷா டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்காக சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார் த்ரிஷா. இதற்கு முன்பும் பல படங்களுக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார் த்ரிஷா.

சர்ச்சைக் காட்சி

சர்ச்சைக் காட்சி

இதேபோல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படம் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே. அதாவது கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் நல்ல பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது குறித்தும் கூறியுள்ளார் பிகே. அதாவது கோமதி காட்சி தான்அது. பெண்களை இழிவுப்படுத்துவது போல் உள்ளதாக இந்த காட்சிக்கு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் டாக்டர் படத்தை இயக்குநர் ரத்னகுமார் பாராட்டிய தகவலையும் கூறியுள்ளார் பிகே.

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

இதேபோல் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் சர்ச்சையில் சிக்கியது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதாவது இந்தி படத்தின் கதை ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் கதை என்றும் இதற்காக அந்த கதையின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தது. மற்றும் அப்பிரச்சனையை படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா பேசி தீர்த்ததையும் கூறியுள்ளார் பிகே.

தளபதி 66 ஹீரோயின்

தளபதி 66 ஹீரோயின்

இதேபோல் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் ஹீரோயின் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதாவது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X