twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனோபாலாவா, ரவி வர்மாவா? யார்தான் தலைவர்? சின்னத்திரை நடிகர் சங்கத்தில் திடீர் பரபரப்பு!

    By
    |

    சென்னை: சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில், யார் தலைவர் என்பது பற்றி எழுந்துள்ள திடீர் பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ் சினிமா சங்கங்கள் இப்போது சத்தமின்றி இருக்கின்றன. காரணம், நடிகர் சங்க விவகாரமும் தயாரிப்பாளர் சங்க விவகாரமும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக, பாரதிராஜா தலைமையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், உருவாகி இருக்கிறது.

    கண்ணம்மா.. நடந்து, நடந்து கடைசியில பிக்பாஸ் வீட்டுக்கே வந்துட்டாங்க.. இது மரண பங்கம் டா மாப்ள!கண்ணம்மா.. நடந்து, நடந்து கடைசியில பிக்பாஸ் வீட்டுக்கே வந்துட்டாங்க.. இது மரண பங்கம் டா மாப்ள!

    சின்னத்திரை சங்கம்

    சின்னத்திரை சங்கம்

    இந்தச் சங்கம் இப்போது பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறது. தியேட்டர் அதிபர்களுக்கு அவர்கள் வைத்த கோரிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சினிமா தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் போல, சின்னத்திரைக்கும் சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கங்களில் சின்னத்திரை நடிகர் சங்கத்துக்குள் இப்போது பிரச்னை.

    நடிகர் மனோபாலா

    நடிகர் மனோபாலா

    சின்னத்திரை நடிகர் சங்கத்தில், 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதன் தலைவராக இருப்பவர், ரவிவர்மா. துணைத் தலைவராக மனோபாலா இருக்கிறார். ரவி வர்மாவுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    புதிய தலைவர்

    புதிய தலைவர்

    கடந்த சில மாதங்களாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், துணைத் தலைவராக இருந்து வந்த நடிகர் மனோபாலா தலைமையில் நிர்வாகிகள் சிலர் ஒன்று கூடியுள்ளனர். அவர்கள் ரவிவர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை, தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டோம் என்றும் புதிய தலைவராக மனோபாலாவை தேர்வு செய்து இருக்கிறோம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

    அதிகாரம் இல்லை

    அதிகாரம் இல்லை

    'தலைவர் பதவியில் இருந்து நீக்க, பொதுக்குழுவுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் யாரையும் பதவி நீக்கம் செய்ய முடியாது. அதனால் நானே தலைவராக நீடிக்கிறேன்; என்று ரவிவர்மா கூறி வருகிறார். இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்து நாளை விளக்கம் அளிக்கவும் இருக்கிறார் ரவி வர்மா.

    Recommended Video

    Chinnathirai Press Meet கைதான 4 நடிகைகள் | Vijay Sethupathi
    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    கொரோனா லாக்டவுன் நேரத்தில் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவிகள் முறையாகச் சேரவில்லை என்றும் முறைகேடு நடந்துள்ளது என்றும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் சில உறுப்பினர்கள். இதையடுத்து ரவிவர்மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Read more about: manobala மனோபாலா
    English summary
    who is president? problem has arisen in Tv actors association
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X