அஜித்தின் அடுத்தப்பட தயாரிப்பாளர் போனி கபூர் இல்லையாம்.. இவர்தானாம்.. கோலிவுட்டை கலக்கும் தகவல்!
சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க போகும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
அஜித் சம்பந்தமாக ஏதாவது ஒரு வார்த்தை வந்தாலே போதும் அதனை ட்ரென்டாக்கி தெறிக்க விடுவார்கள் அஜித் ரசிகர்கள்.

அஜித்தின் வலிமை படம்
அஜித் தற்போது தனது 61 வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

5 நாள் படப்பிடிப்பு பாக்கி
நேர்க்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச் வினோத், போனி கபூர் மற்றும் அஜித் இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்தனர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்த நிலையில் இன்னும் 5 நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளதாக தெரிகிறது.

அட்டகாசமான சண்டைக் காட்சிகள்
இந்த ஐந்து நாள் படப்பிடிப்பையும் வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பு நிறைவடைந்தால் மொத்த படமும் நிறைவடைந்துவிடும். வலிமை படத்தில் அட்டகாசமான சண்டைக் காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் விருந்தாக இருக்கும்
வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்றும் தெரிகிறது. படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் பலரும் படம் குறித்த சுவாரசிய தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகர்களின் காத்திருப்புக்கு தீனி
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு தீனி போடும் வகையில் இந்த அப்டேட் இருந்தது.

அனலை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக்
க்யூட்டான கெட்டப்பில் தீப்பொறி பறக்க அனலை கிளப்பியது இந்த ஃபர்ஸ்ட் லுக். மேலும் அதிக வியூஸ்களை குவித்த மோஷன் போஸ்டர் என்ற பெருமையும் வலிமை ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்தது.
வலிமை படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

மீண்டும் மூவர் கூட்டணி
இந்நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டது. அதாவது அஜித், ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்த போனி கபூரே இந்த புதிய படத்தையும் தயாரிப்பார் எனவும் சொல்லப்பட்டது.

போனி கபூர் இல்லை
இதன் மூலம் இயக்குனர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மூன்றாவது முறையாக அஜித் படத்தில் இணைகிறார்கள் என்று தகவல் பரவியது. இந்நிலையில் அஜித்தின் புதிய படத்தை போனி கபூர் தயாரிக்க போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தப் படம் சத்யஜோதி பிலிம்ஸ்
அதாவது சத்யஜோதி பிலிம்ஸ் தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அஜித்தை வைத்து ஏற்கனவே விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்துள்ளது.

அடுத்த படத்தின் கால் ஷீட்
இந்நிலையில் நடிகர் அஜித் சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு தான் தனது அடுத்தப் படத்துக்கான கால்ஷீட்டை கொடுக்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. விவேகம் படம் சத்யஜோதிக்கு நஷ்டத்தை தந்ததால், உடனடியாக விஸ்வாசம் படத்தை அவர்களுக்கு நடித்துத் தந்தார் அஜித்.

தனுஷ் நடிக்கும் மாறன்
விஸ்வாசம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், மீண்டும் சத்யஜோதிக்கு கால்ஷீட் தர அஜித் முன்வந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்போது தனுஷ் நடிக்கும் மாறன் படத்தையும், ஹிப் ஹாப் தமிழா இயக்கி நடிக்கும் சிவகுமாரின் சபதம் படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











