Bigg Boss Tamil 7 Raveena Daha: யாரு இந்த ரவீனா தாஹா? அதிரடி என்ட்ரி.. லீக்கான பிக் பாஸ் வீடியோ!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அசத்தல் பர்ஃபார்மன்ஸ் உடன் வீட்டுக்குள் நுழையும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக லீக் ஆகி வருகின்றனர்.
ஏற்கனவே கிட்டத்தட்ட 20 பெயர் கொண்ட பட்டியல் கசிந்த நிலையில், தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிருத்விராஜ் பப்லு, கூல் சுரேஷ், யுகேந்திரன், பிக் பாஸ் அமீரின் நட்பு ஐஷு மற்றும் குழந்தை முதலே சீரியல் பிரியர்களின் செல்லக் குட்டியான 19 வயதாகும் ரவீனா தாஹா உள்ளிட்ட போட்டியாளர்கள் உள்ளே நுழைந்திருப்பதாக டாப் சீக்ரெட் தகவல்கள் கசிந்துள்ளன. அதிலும், ரவீனா தாஹாவின் பர்ஃபார்மன்ஸ் வீடியோவே லீக்கானது தான் பயங்கர ஆச்சர்யமாக மாறியுள்ளது.
புதுசா ரெண்டு வீடு சூப்பர் செட்: இந்த முறை பிக் பாஸ் வீட்டை பார்த்தால் பாலிவுட்டில் போடப்படும் பிரம்மாண்டமான செட்களுடன் 2 பிக் பாஸ் வீடுகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் கலை இயக்குநர் மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வீட்டுக்குள்ளே பிக் பாஸ் 7 என ஆங்கிலத்தில் பிரம்மாண்ட லைட் செட்டப்புகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று கசிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ரவீனா தாஹா கன்ஃபார்ம்: 2003ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி சென்னையில் மலையாள குடும்பத்தில் பிறந்தவர் ரவீனா தாஹா. தனது 4 வயதிலேயே ரம்யா கிருஷ்ணன் நடித்த தங்கம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். பூவே பூச்சூடவா, மெளன ராகம் 2 உள்ளிட்ட சீரியல்கள் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது.
ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தும் அசத்தியிருப்பார். மேலும், சில படங்களிலும் நடித்துள்ளார். டிடிஎஃப் வாசன் உடன் பைக்கில் அமர்ந்து கொண்டு இவர் அடித்த லூட்டி வீடியோ வேறலெவலில் டிரெண்டானது.

லீக்கான வீடியோ: வண்ணாரப்பேட்டையில பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரவீனா தாஹா அறிமுகம் ஆகப் போகிறார். சில தீவிரமான பிக் பாஸ் வெறியர்கள் உள்ளே புகுந்து ரவீனா நடனம் ஆடும் வீடியோவையே மொபைலில் எடுத்து இணையத்தில் லீக் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வீடியோ உண்மையாகவே பிக் பாஸ் ஸ்டேஜில் அவர் ஆடிய வீடியோ தானா என்பது நாளை தெரிந்து விடும்.
1.7 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட ரவீனா தாஹாவுக்கு நிச்சயம் பிக் பாஸ் வீட்டுக்குள் லவ் டிராமா ஸ்க்ரிப்ட் இடம்பெறும் என்றும் இப்பவே ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்துள்ளனர். வரும் 10ம் தேதி முதல் பிறந்தநாள் கேக்கும் ரவீனாவுக்குத் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வெட்டப் போறாங்க என்பதும்


Click it and Unblock the Notifications











