twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேனீக்களுக்கு நான்.. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு யார் பொறுப்பு..? நடிகை ஆண்ட்ரியா அடடா போஸ்ட்!

    By
    |

    சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு எப்படி பொறுப்பேற்காமல் இருக்க முடியும்? என்று நடிகை ஆண்ட்ரியா கேட்டுள்ளார்.

    Recommended Video

    Pon Magal Vandhal Jothika as Lady Ajith | Kaa Andrea Jeremiah • Aiswarya Dutta, Myna Nandhini

    தமிழில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள ஆண்ட்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

    தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், கமலின் விஸ்வரூபம், உத்தமவில்லன், தரமணி, வடசென்னை உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    கணவர் தெருவில் இறங்கி குத்தாட்டம்... பார்த்து ரசித்த நடிகை.. வைரல் வீடியோ!கணவர் தெருவில் இறங்கி குத்தாட்டம்... பார்த்து ரசித்த நடிகை.. வைரல் வீடியோ!

    லாக்டவுன்

    லாக்டவுன்

    இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், சுந்தர்.சியின் அரண்மனை 3 உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் இப்போது தன் வீட்டில் உள்ள தேன் கூட்டையும் புலம் பெயர் தொழிலாளர்களையும் ஒப்பிட்டு, ஒரு பதிவு போட்டுள்ளார்.

    மாமரத்தில் தேன்கூடு

    மாமரத்தில் தேன்கூடு

    இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: 'என் ஜன்னலுக்கு வெளியே வந்த தேனீக்களின் சத்தத்தால் நேற்று எழுந்தேன். வெளியே பார்த்தபோது, என் பால்கனிக்கு குறுக்கே இருக்கும் மாமரத்தில் பெரிய தேன்கூடு. நான் தேனீக்களுக்கு எதிரானவள் இல்லை. அதனால் அதை கலைக்காமல், தேன்கூட்டை இடமாற்றம் செய்வதற்கான வழியை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன்.

    முக்கியமானது

    முக்கியமானது

    இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, பூச்சிகளை கட்டுப்படுத்துபவர்களை ( pest control) அழைத்து அனைத்து தேனீக்களையும் அழிப்பது. மற்றொன்று அவற்றோடு வாழக் கற்றுக்கொள்வது. ஆயிரக்கணக்கான தேனீக்களை கொல்வதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. நம் சுற்றுச்சூழலுக்கு இது முக்கியமானது என்பதால் அவற்றின் பொறுப்பை உணர்கிறேன்.

    தொழிலாளர் பிரச்னை

    தொழிலாளர் பிரச்னை

    தேனீக்களை அழித்தால் அடுத்து நாமும் அழிய வேண்டியதுதான். இது தேனீக்களை பற்றிய கதைதான் என்றாலும் நம் நாட்டின் புலம்பெயர் தொழிலாளர் பிரச்னையையும் பற்றியது. என் பால்கனி அருகிலுள்ள தேனீக்களுக்கு நான் பொறுப்பேற்கும்போது, நாடு முழுவதும் சிக்கித்தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இந்த அரசு எப்படி பொறுப்பேற்காமல் இருக்க முடியும்?

    கற்றுக்கொள்ள

    கற்றுக்கொள்ள

    ராணீ தேனி, புத்திசாலி. மற்ற தொழிலாளித் தேனீக்கள் இல்லை என்றால், தான் ஒன்றுமில்லை என்று அதற்குத் தெரியும். தேன்கூடு சிறப்பாக இயங்க, தொழிலாளி தேனீக்கள் வேண்டும். தேனீக்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். இதற்கு பல சுவாரஸ்யமான கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    Actress Andrea raise question about, who is responsible for millions of stranded migrant workers?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X