யார் இந்த எஸ்ஏசி...? யூடியூபில் ரசிகர்களை சந்திக்கும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்!

சென்னை: தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்

கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி என்ற படத்தை இயக்கி இருந்தார்

இப்பொழுது சமுத்திரகனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ள இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் யார் இந்த எஸ்ஏசி? என்ற புதிய யூடியூப் நிகழ்ச்சியின் மூலம் மக்களுடன் நேரடியாக இணைய உள்ளார்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் இயக்குனர் சந்திரசேகர் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் தந்தையான இவர் விஜயகாந்த், ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஏன் நடிகர் விஜய்யின் ஆரம்பகால படங்கள் பலவற்றை இவர் இயக்கியுள்ளார்.

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் விளங்கிக் கொண்டிருக்கும் எஸ் ஏ சந்திரசேகர் கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி என்ற படத்தை இயக்கினார். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் படங்களை கொடுப்பதில் இயக்குனர் எஸ்ஏசி மிகவும் ஸ்பெஷலிஸ்ட். ஜெய்யின் 25வது திரைப்படமாக வெளியான கேப்மாரியில் தற்போதுள்ள இளைஞர்களின் காதல் பற்றி இப்படத்தில் காட்டியிருந்தார். கேப்மாரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த படம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நான் கடவுள் இல்லை

நான் கடவுள் இல்லை

சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து உள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் மீண்டும் பழைய எஸ் ஏ சியை காணலாம் என ரசிகர்கள் ஆரவாரமாக உள்ளனர். விரைவில் நான் கடவுள் இல்லை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களுக்காக புதிய அவதாரம் ஒன்றை ஏஸ்ஏசி எடுத்துள்ளார்.

யார் இந்த எஸ்ஏசி?

யார் இந்த எஸ்ஏசி?

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போக இணையதளத்தின் பயன்பாடு மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாகிப் போனது. குறிப்பாக யூடியூப் தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பிரபலங்கள் முதல் சாதாரண மனிதன் வரை அனைவரும் யூட்யூப் தளத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இதுவரை இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமாகி இருந்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் யூட்யூப் தளத்தில் தோன்றி மக்களுடன் நேரடியாக தோன்றி வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார். யார் இந்த எஸ்ஏசி? என்ற பெயரில் வெளியாகும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன் புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X