யார் இந்த எஸ்ஏசி அடுத்த எபிசோடுக்கு கொடைக்கானல்!

சென்னை: தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனர்களில் ஒருவராக உள்ளவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்

தற்போது உள்ள தலை முறைக்கு ஏற்றவாறு காதல் படங்களை இயக்கி வருகிறார்

யூடியூபில் யார் இந்த எஸ்ஏசி என்ற நிகழ்ச்சியில் தனது திரை வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து வரும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அடுத்த எபிசோடுக்கு கொடைக்கானல் செல்கிறார்.

இளம் தலைமுறையினரின் காதலை

இளம் தலைமுறையினரின் காதலை

விஜயகாந்த்,விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர் இன்று உச்ச நிலையை அடைந்ததற்கு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய படங்கள் மிகப்பெரிய உதவியாக இருந்துள்ளது. அன்று முதல் இன்று வரை தலை முறைக்கு ஏற்றவாறு படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இப்போதுள்ள இளம் தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி இயக்கிய திரைப்படம் கேப்மாரி.

சமுத்திரக்கனி ஹீரோவாக

சமுத்திரக்கனி ஹீரோவாக

நடிகர் ஜெய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார். அதுல்யா,வைபவி என இதில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பார்கள். இளமை துள்ளலுடன் வெளியான இந்தப் படம் ஜெய் க்கு 25வது படமாக வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி வருகிறார்

தெலுங்கில் பல படங்களில் வில்லனாக

தெலுங்கில் பல படங்களில் வில்லனாக

சினிமாவில் சமூக அக்கறையுடன் படங்களை இயக்கி இயக்குனராக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த நடிகராக விளங்கி வரும் நடிகர் சமுத்திரக்கனிக்கு தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தமிழில் என்னதான் நல்ல கருத்துகளைச் சொல்லும் நல்ல நடிகராக இருந்தாலும் தெலுங்கில் இவர் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இப்போது இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருவது அதைத் தொடர்ந்து நான் கடவுள் இல்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்

யார் இந்த எஸ்ஏசி

யார் இந்த எஸ்ஏசி

நான் கடவுள் இல்லை இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் இனியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் சந்திரசேகர் தன்னுடைய திரை வாழ்க்கை பயணங்களை ரசிகர்களுடன் பகிர நினைத்து யூட்யூப் தளத்தில் யார் இந்த எஸ்ஏசி என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்து வருகிறார்.

அடுத்த எபிசோட் கொடைக்கானலில்

அடுத்த எபிசோட் கொடைக்கானலில்

அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டு வரும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அடுத்த எபிசோட் ஷூட்டிங்குக்காக கொடைக்கானல் செல்ல உள்ளார். இந்த எபிசோடில் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கொடைக்கானலில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை எஸ்ஏசி இந்த எபிசோடில் பகிரவுள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X