சல்மான் கான் காதலி அவரா, இவரா?: தலையை பிச்சுக்கும் பாலிவுட்
மும்பை: சல்மான் கான் யாரை காதலிக்கிறார் என்று பாலிவுட்காரர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
50 வயதாகியும் இன்னும் சிங்கிளாகவே உள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவர் வாழ்வில் அடிக்கடி காதல் வந்து போகிறதே தவிர அது திருமணம் வரை செல்வது இல்லை.
இந்நிலையில் தான் அவர் ரோமானியாவை சேர்ந்த நடிகை லூலியா வந்தூரை காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

லூலியா
லூலியாவும், சல்மான் கானும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பாலிவுட்காரர்கள் வாய் வலிக்க வலிக்க மீண்டும் மீண்டும் கூறி வருகின்றபோதிலும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

மாலத்தீவு
சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் மகன் அகில் சர்மாவின் முதலாவது பிறந்தநாளை கொண்டாட மொத்த குடும்பமும் மாலத்தீவுகளுக்கு சென்றது. கூடவே லூலியாவும் சென்றார்.

காதலே
லூலியாவும், சல்மான் கானும் மாலத்தீவுகளில் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. இதை பார்த்தவர்கள் ஓகே, ஓகே இது காதலே தான் என்று உறுதி செய்தனர்.

கத்ரீனா
சல்மான் தற்போது டைகர் ஜிந்தா ஹை படத்தில் தனது முன்னாள் காதலி கத்ரீனா கைஃபுடன் சேர்ந்து நடித்து வருகிறார். செட்டில் சல்மானும், கத்ரீனாவும் நடந்து கொள்ளும் விதத்தை பார்ப்பவர்கள் அவர்கள் காதலை புதுப்பித்துக் கொண்டதாக பேசுகிறார்கள். சல்மானின் தற்போதைய காதலி லூலியாவா, கத்ரீனாவா என்று தெரியாமல் குழம்புகிறது பாலிவுட்.


Click it and Unblock the Notifications











