இவர்தான் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலராம்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

Recommended Video

Sanam Shetty Reveals about Tharshan | Sanam Interview | Bigg Boss 3 | Throwback

சென்னை: சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவர்தான் என இளைஞர் ஒருவருடன் சனம் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை சனம் ஷெட்டியும் பிக்பாஸ் மூலம் பிரபலமான தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்களில் காதல் விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதுதான் தெரியவந்தது.

இந்நிலையில் தர்ஷனுக்கும் நடிகை சனம் ஷெட்டிக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சனம் ஷெட்டி மூலமாக தெரியவந்தது. தன்னுடன் திருமண நிச்சயம் முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக போலீஸில் புகார் அளித்தார்.

நிச்சய போட்டோக்கள்

நிச்சய போட்டோக்கள்

மேலும் தன்னுடன் நடிக்கர்களுடன் இணைத்து வைத்து கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் தர்ஷன் பேசுவதாகவும் கண்ணீர் மல்க புகார் அளித்தார். இதன்மூலம் தான் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த தகவல் வெளியானது. தர்ஷனுக்கும் தனக்கும் நிச்சயதார்த்தம் நடந்த போட்டோக்களையும் அவர் மீடியா முன்பு சமர்ப்பித்தார் சனம்.

முன்னாள் காதலர்

முன்னாள் காதலர்

இதனை தொடர்ந்து தர்ஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட தர்ஷன், முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டிக்கு இன்னமும் தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டினார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ரம்யாவின் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் இரவு நடைபெற்ற பார்ட்டியில் ஆட்டம்போட்டார் என்று குற்றம் சாட்டினார்.

முடியவே முடியாது

முடியவே முடியாது

மேலும் சனம் ஷெட்டி பிகினியில் போட்டோ ஷுட் நடத்தியது தனக்கு பிடிக்கவில்லை என்றும், இதுகுறித்து கேட்டபோது உன்னுடைய விளம்பரத்துக்காகதான் பிகினி போட்டோ ஷுட் நடத்தினேன் என்றும் சனம் ஷெட்டி கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இவரா முன்னாள் காதலர்?

இவரா முன்னாள் காதலர்?

சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் யார் என்ற கேள்விக்கு தர்ஷன் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவர்தான் என்று போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அவரது பெயர் அஜய் என்று தெரிகிறது. சனம் ஷெட்டியும் அஜயும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளக்கம்

விளக்கம்

இருவரும் வேந்தன் என்ற படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக தர்ஷன் சொல்வதுபோல் சனம் ஷெட்டியும் தானும் இரவு பார்ட்டியில் தனியறையில் தங்கவில்லை என்றும் அவர் சொல்வதில் உண்மையில்லை என்றும் கூறினார். மேலும் பார்ட்டியில் இருவரும் பார்த்துக்கொண்டது உண்மைதான், ஆனால் இருவரும் ஒருவார்த்தைக் கூட பேசிக்கொள்ளவில்லை என்று விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X