சிவகார்த்திகேயன் கொடுத்த வாட்ச்... மம்மி நடிகை மகிழ்ச்சி
வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திக்கேயன் தனக்கு அம்மாவாக நடித்த சுஜாதாவிற்கு கை கடிகாரம் ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளார்.
வெள்ளித்திரையில் இப்போது அம்மா வேடத்துக்கு, சரண்யாவுக்குப் பிறகு பிரபலமாக இருப்பவர் சுஜாதா.
கமலின் ‘விருமாண்டி' படத்தில் அறிமுகமானாலும், ‘பருத்தி வீரன்' படத்தில் ப்ரியாமணியின் தாயாராக நடித்த பிறகுதான், ‘பருத்தி வீரன்' சுஜாதா என்று பிரபலம் ஆனார்.

அம்மா நடிகை
விருமாண்டியில் தொடங்கி, பருத்திவீரன், சரவணப் பொய்கை, ‘சுந்தரபாண்டியன்', ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', ‘கோலி சோடா' என்று 45-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார் சுஜாதா.

காக்கிச் சட்டை
சுஜாதாவின் இப்போதைய லேட்டஸ்ட் படம், சிவகார்த்திகேயன், ஶ்ரீதிவ்யா நடிக்கும் ‘காக்கிச் சட்டை'.

சிவகார்த்திகேயன் பரிசு
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஹீரோ சிவகார்த்திகேயன் அன்புப் பரிசாக, விலை மதிப்பற்ற டைட்டன் வாட்ச் ஒன்றை சுஜாதாவுக்குப் பரிசளித்தாராம்.

மம்மி நான்தான்
சிவகார்த்திகேயன் செம ஜாலி டைப். நான் ஏற்கெனவே ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துல அவரோட அம்மாவா நடிச்சிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்ததை இப்போ நினைச்சாக்கூட எனக்குச் சிரிப்பு வந்துடும்! அப்போதிலிருந்து என்னை எங்க பார்த்தாலும் சிவகார்த்திகேயன், ‘வாங்க மம்மி.. போங்க மம்மி... மம்மி ரிட்டர்ன்ஸ்'னு கலாய்க்க ஆரம்பிச்சிடுவாரு!

மாமியாரானேன்
இப்போ ‘காக்கிச் சட்டை' படத்துல நான் அவருக்கு மம்மி கிடையாது. மாமியார்! ‘ஒரு மம்மி மாமியாரானதே!'னு செம ஜாலி அரட்டை பண்றாரு ஸ்பாட்ல! ‘

தொடரும் நட்பு
காக்கிச் சட்டை' கடைசி நாள்ல, ‘உங்களுக்கு வேண்ணா இது கடைசி நாளா இருக்கலாம்; ஆனா, என்னைக்குமே நம்ம நட்பு தொடரணும் மம்மி'னு சொல்லி, படார்னு ஒரு வாட்ச்சைக் கையில கட்டி விட்டாரு சிவா!

மம்மியோட வாழ்த்து
உண்மையிலேயே சிவா ஜென்யூன். அவர் இன்னும் உயரம் வளர இந்த ‘மம்மி'யோட வாழ்த்துகள்! என்று மனதார வாழ்த்துகிறார் சுஜாதா.


Click it and Unblock the Notifications











