முதல் பட ரிலீஸூக்குள் சிவகார்த்திகேயன் பட வாய்ப்பு.. சேயோன் இயக்குநர் யார்?.. சகோதரர் சொல்வது என்ன தெரியுமா?

சென்னை: தாய் கிழவி படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன்; அந்தப் படம் ரிலீஸாவதற்குள் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து சேயோன் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் க்ளிம்ப்ஸ் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. சூழல் இப்படி இருக்க யார் இந்த சிவக்குமார் முருகேசன் என பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் அவரது சகோதரர் ஜெய் ஆனந்த் முருகேசனின் பதிவு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ராதிகா சரத்குமார் நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் தாய் கிழவி. படமானது 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன். இவர்தான் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாய் கிழவி படத்தின் டீசர், பாடல், ஸ்னீக் பீக் உள்ளிட்டவை பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. நிச்சயம் இப்படம் கோலிவுட்டில் முக்கியமான படமாக இருக்கும் என்பது இப்போதே உறுதியாகிவிட்டது.

சிவகார்த்திகேயன் பட வாய்ப்பு: தாய் கிழவி படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ரொம்பவே ஈர்க்கப்பட்டுவிட்டார். இதன் காரணமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே சிவக்குமார் இயக்கத்தில் நடித்துவிட முடிவு செய்து அவருக்கு தேதிகளை கொடுத்துவிட்டார். படத்துக்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கிறார். எஸ்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு வெளியான க்ளிம்ப்ஸும் அட்டகாசமான ரெஸ்பான்ஸை பெற்றது.

Who Is Sivakumar Murugesan Director of Thaai Kizhavi Bags Sivakarthikeyan s Seyon Before Debut Release
Photo Credit:

பலராலும் தேடப்படும் விவரங்கள்: முதல் படம் ரிலீஸாவதற்குள்ளாகவே டாப் 10 ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் வாய்ப்பை சிவக்குமார் பெற்றது ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து யார் இந்த சிவக்குமார் முருகேசன் என பலரும் தேட தொடங்கி; சோஷியல் மீடியா, யூடியூப் சேனல்கள் எங்கும் அவர் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் அவரது சகோதரர் ஜெய் ஆனந்த் முருகேசனின் முகநூல் பதிவு கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

ஜெய் ஆனந்த் பதிவு: அவர் தனது முகநூல் பக்கத்தில், "யார் இந்த சிவகுமார் முருகேசன்? பல சேனல்களும் இதைப் பற்றி சற்று அதிகமாகவே ஆராய்ந்து வருகின்றன. சிவா 2026இல் வானத்தில் இருந்து திடீரென்று குதித்து சினிமாவுக்குள் வந்துவிடவில்லை. 2013 இல் இருந்து இதே சினிமாவுக்குள்தான் இருக்கிறான். எப்படியாவது ஜெயிச்சுரனும்னு எல்லாரையும் போலவே அல்லது எல்லாரையும் விடவும் அதிகமாகவே உழைத்திருக்கிறான்.

மூன்று குறும்படங்கள்: 3 குறும்படங்கள் இயக்கி, crowd Control AD ஆக, clap AD ஆக, Art department AD ஆக, Story discussionல, திரைக்கதை எழுத்தாளராக, வசனகர்த்தாகவாக , உதவி இயக்குனராக, துணை இயக்குனர், இணை இயக்குனர் என எல்லா வேலையும் 13 வருடங்கள் பார்த்துவிட்டுதான் இன்று இயக்குனர் ஆகியிருக்கிறான். என்னை விடவும் அதிகம் தெரிந்தவர்கள் யாருமில்லை என்பதால் சற்றே பொறுத்திருங்கள். இன்னும் சில தினங்களில் நானே எழுதுகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள், இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறாரா? அப்போ கண்டிப்பாக அதற்கேற்ற ஊதியமாகத்தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். சிவக்குமார் முருகேசன் பற்றி இன்னும் பல விஷயங்களை ஜெய் ஆனந்த்தின் பதிவு வெளிச்சமாக்கும் என்பதை நம்பலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X