நட்சத்திர சங்கமமாக நடந்த தெலுங்கு பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

ஹைதராபாத்: ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5ன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் இயக்குநர் ராஜமெளலி, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட், ராஷ்மிகா மந்தனா, ஷ்ரேயா, நானி, நாக சைதன்யா, சாய் பல்லவி என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியில் 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வென்ற அந்த அதிர்ஷ்டசாலி டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து இங்கே காண்போம்.

நட்சத்திர சங்கமம்

நட்சத்திர சங்கமம்

புத்தாண்டு வருவதை முன்னிட்டு ஸ்டார் மா ரசிகர்களுக்காக மிகப்பெரிய நட்சத்திர சங்கமம் நடத்தியது போலவே இந்த பிக் பாஸ் தெலுங்கு சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்குநர்கள் ராஜமெளலி, சுகுமார், நடிகர்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட், ராஷ்மிகா மந்தனா, ஷ்ரேயா, நானி, நாக சைதன்யா, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டாப் 3 போட்டியாளர்கள்

டாப் 3 போட்டியாளர்கள்

கடைசியாக நாக சைதன்யா தங்க பெட்டியுடன் உள்ளே வந்து காசு கொடுத்தும் வெளியேற மாட்டோம் என உறுதியாக இருந்த அந்த டாப் 3 போட்டியாளர்களான சண்முக், ஸ்ரீராம சந்திரா மற்றும் சன்னி ஆகிய மூவருமே இன்றைய வின்னர்கள் தான். நாக சைதன்யாவின் பிரைஸ் மணியை வாங்காத நிலையில் கடைசியாக ஸ்ரீராம சந்திரா வெளியேற்றப்படார்.

டைட்டில் வின்னர் யார்

டைட்டில் வின்னர் யார்

கடைசியாக பிக் பாஸ் வெற்றி கோப்பையை காட்டிய நடிகர் நாகார்ஜுனா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று சன்னி மற்றும் சண்முகாவை அழைத்துக் கொண்டு கிராண்ட் ஃபினாலே ஸ்டேஜுக்கு வந்தார். அதில், சன்னி தான் இந்த 5வது சீசன் தெலுங்கு பிக் பாஸின் டைட்டில் வின்னர் என கையை தூக்கி அறிவித்தார் நாகார்ஜுனா.

இத்தனை பரிசுகளா

இத்தனை பரிசுகளா

சண்முக் ரன்னர் அப் ஆன நிலையில், டைட்டிலை தட்டிச் சென்ற சன்னிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை, பிக் பாஸ் டைட்டில் வின்னர் கோப்பை மட்டுமின்றி 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. சமூக வலைதளங்களில் சன்னியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

BIGG BOSS TRP-ஐ பின்னுக்கு தள்ளிய Sun Tv Serial | Channel TRP, Poove Unakkaga
யார் இந்த விஜே சன்னி

யார் இந்த விஜே சன்னி

பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை தொடங்கி விஜேவாக முன்னேறிய சன்னி நடிகராகவும் உயர்ந்தார். பிக் பாஸ் தெலுங்கு சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சன்னியின் நிஜ பெயர் அருண் ரெட்டி. கல்யாண வைபோகம் எனும் டிவி சீரியல் மூலம் பிரபலமான சன்னி பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X