Aishwarya Shankar: ஐஸ்வர்யா ஷங்கரின் வருங்கால கணவர் யார் தெரியுமா?.. அடடே இவரும் பிரபலமா?

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் என இந்திய சினிமாவே கொண்டாடும் தமிழ் இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2, 3 படங்களை கொடுக்க காத்திருக்கிறார். மேலும், தெலுங்கில் முதன்முறையாக ராம்சரண் உடன் இணைந்து கேம் சேஞ்சர் படத்தையும் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை இயக்க காத்திருக்கிறார். மேலும், தமிழில் வேள்பாரி படத்தை இயக்கும் எண்ணத்திலும் இருக்கிறார்.

சினிமாவில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருந்து வரும் ஷங்கர் குடும்ப வாழ்க்கையில் அதிகம் கவனம் செலுத்தாத நிலையில், அவரது மூத்த மகளுக்கு ஆசை ஆசையாக பார்த்த மாப்பிள்ளையின் கேரக்டர் சரியில்லை என்பது தாமதமாகவே தெரிந்து பல கஷ்டங்களை அனுபவித்து விட்டார்.

Who is Tharun Karthikeyan Shankar daughter Aishwaryas new groom

கொரோனா காலத்தில் திருமணம்: புதுச்சேரி கிரிக்கெட் அணியில் ரஞ்சி கோப்பைக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு வரனாக பார்த்தார் ஷங்கர். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மகாபலிபுரத்தில் ரெசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. பெரியளவில் அனைத்து நட்சத்திரங்களையும் அழைத்து திருமண வரவேற்பை நடத்த வேண்டும் என நினைத்த ஷங்கருக்கு அதற்குள் மாப்பிள்ளை பற்றிய விஷயங்கள் தெரிய வர அதிர்ச்சியாகி விட்டார்.

விவாகரத்து: கிரிக்கெட் வீரரான ரோகித் உடன் திருமணம் நடைபெற்ற நிலையில், சில மாதங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதனால், இயக்குநர் ஷங்கர் மனம் நொறுங்கிப் போய்விட்டார். அவசரப்பட்டு தப்பான இடத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொடுத்து விட்டோமே என மனம் உடைந்து போன நிலையில், மகள் கணவரை விட்டு பிரிந்து அப்பா வீட்டுக்கே திரும்பி விட்டார். சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்ந்து விவாகரத்தும் பெற்று விட்டனர்.

Who is Tharun Karthikeyan Shankar daughter Aishwaryas new groom

வருங்கால கணவர் யார்?: கிரிக்கெட் பக்கமே இனி வேண்டாம், நமக்கு நல்லா தெரிந்த சினிமா பக்கத்தில் இருந்தே ஒரு மாப்பிள்ளையை மகளுக்கு தேடி பிடிப்போம் என நினைத்த இயக்குநர் ஷங்கர் தருண் கார்த்திகேயன் எனும் உதவி இயக்குநரை தனது மூத்த மகளுக்கு வரனாக பார்த்து எளிமையான முறையில் நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ஷங்கரின் வருங்கால கணவர் தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநர் மட்டுமின்றி பாடலாசிரியராகவும் பின்னணி பாடகராகவும் பன்முகத்திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் திருமணம்: முதல் திருமணம் முடிந்து சில மாதங்கள் கூட மூத்த மகள் தாம்பத்ய வாழ்க்கையை சரியாக வாழாத நிலையில், அவளுடைய வாழ்க்கை வீணாகி விடக் கூடாது என உடனடியாக 2வது திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கிறாராம் ஷங்கர். நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், விரைவில் திருமணமும் நடைபெறும் என்கின்றனர். அக்காவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். விருமன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதிதி ஷங்கர் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி நடிக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X