நடிகர் ராணாவின் இதயத்தை கொள்ளை கொண்ட அந்த காதலி இவர்தான்.. யார் இந்த மிஹீகா.. பின்னணி என்ன?!
சென்னை: நடிகர் ராணாவின் இதயத்தை கொள்ளை கொண்ட காதலி மிஹீகா குறித்த தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
நடிகர் ராணா இந்தி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
பாகுபலி சீரிஸ் படங்களில் நடித்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்கவும் பிரபலமானார் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் பல்வால் தேவனாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பரிட்சயத்தை பெற்றார்.

கமிட்டான ராணா
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது சமூக வலைதள பக்கங்களில் 'அவள் எஸ் சொல்லிவிட்டாள்' (And she said Yes) என ஸ்மைலியுடன் பதிவிட்டிருந்தார். மேலும் தனது காதலியுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து மக்கள் மத்தியில் தான் கமிட்டானதை அறிவித்தார்.

இதயத்தை திருடிய மிஹீகா
இதனை தொடர்ந்து ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் ராணாவுக்கு வாழ்த்து மழையை பொழிந்தனர். மேலும் ராணா காதலிக்கும் அந்த மிஹீகா பஜாஜ் யார் என்ற தகவலை அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர் ரசிகர்கள். ராணாவின் இதயத்தை திருடிய மிஹீகா பஜாஜ், ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.

டிஸைன் ஸ்டுடியோ
இன்டீரியர் டிஸைனரான மிஹீகா பஜாஜ், 2018ஆம் ஆண்டு முதல் ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். விதம் விதமாக சமைப்பதிலும் ஆர்வம் கொண்டவராம் மிஹீகா. ஈவென்ட் மேனேஜ்மென்ட், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார் மிஹீகா.

ஹைத்ராபாத் என்றால் உயிர்
மிஹீகா லண்டன் செல்சியா கலைக்கல்லூரியில் இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ளார். ராணாவை போலவே மிஹீகாவுக்கும் ஹைதராபாத் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். ஆனால் மும்பைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையில் பறந்து கொண்டிருக்கிறார்.

அசத்தல் போட்டோக்கள்
மிஹீகாவின் சகோதரர் சமர்த், பிரபலர் டிஸைனர் குணால் ரவலின் சகோதரி சாஷா ரவலை திருமணம் செய்திருக்கிறார். குணால், அர்ஜுன் கபூர் மற்றம் ஷாகித் கபூருக்கு ரொம்பவே நெருக்கமான நண்பர். மிஹீகா, சோனம் கபூரின் திருமணத்தில் அசத்தலாய் பங்கேற்ற போட்டோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











