விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்? டிவிட்டரில் டிரெண்டாகும் #Thalapathy65!
Recommended Video
சென்னை: விஜய்யின் அடுத்தப் பட இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் ஒன்று டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து, பிகில் திரைப்படம் பெரும் சாதனை படைத்துள்ளதாக பேசப்படுகிறது.

பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அடுத்த வரும் ஏப்ரல் மாதல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்பது முடிவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. தடையறதாக்க, மீகான்மன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான் தளபதி65 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாக உள்ளதகாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் படத்தை வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து ஒரு சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மகிழ்திருமேனி படத்தில் விஜய் நடிக்க உள்ளாராம். இப்படத்தை 2021 ஜனவரியில் வெளியிட திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் #Thalapahty65 எனும் ஹேஷ்டேகை டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். தரமான படங்களை கொடுத்துள்ள மகிழ்திருமேனியுடன், விஜய் இணைவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











