Bigg Boss season 7: முதல் கேப்டன் யார்? வந்ததுமே சண்டையை மூட்டி விட்ட பிக் பாஸ்!

சென்னை: பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில், கேப்டன் பதவிக்காக போட்டியாளர்களிடையே இடையே பிக் பாஸ் சண்டையை மூட்டிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்ள பிக் பாஸ் பிரியர்கள் அனைவரும் ஆவலுடன் தொலைக்காட்சி முன் அமர்ந்துள்ளனர். இதில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்துள்ளார். வெந்து தணிந்தது காடு... சிம்புக்கு வணக்கத்தை போடு என்று பிரபலமான இவர், வெளியில் இருக்கும் போதே அலப்பறை செய்வார். இவர் வீட்டுக்குள் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Who is the first captain of Bigg Boss Tamil season 7

பூர்ணா ரவி: இதையடுத்து, இரண்டாவது போட்டியாளராக பூர்ணா ரவி நுழைந்துள்ளார். ஐடியில் வேலை பார்த்து வந்த இவர் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வீட்டிற்கு வந்துள்ளார். வேலூரைச் சேர்ந்த இவர், தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். என் வாய் தான் என் ஆதாரம் என்று ஆரம்பத்திலேயே அலப்பறை கொடுத்தார்.

கேப்டன் பதவிக்கான போட்டி: வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரத்திற்கு பிறகு தான் கேப்டன் பதவிக்கான போட்டி நடத்தப்படும். ஆனால், இந்த முறை முதல் நாளே கேப்டன் பதவிக்கான சண்டையை மூட்டிவிட்டுள்ளார். கூல் சுரேஷ் வந்ததுமே பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டன் நீங்க தான். ஆனால், அடுத்து உள்ளே வரும் போட்டியாளரின் ஐந்து நிமிடம் விவாதம் செய்து அந்த கேப்டன் பதவியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை கூறினார் பிக் பாஸ்.

முதல் நாளே டாஸ்க்: இதையடுத்து, இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்த பூர்ணா ரவி, கூல் சுரேஷூடன் விவாதம் செய்தார். இன்றைய இளைய தலைமுறைக்கு விட்டுக்கொடுங்கள் என்றார். மேலும், நீங்கள் வெளியில் பிரபலம், என் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியதால் கூல் சுரேஷ் கேப்டன் பதவியை பூர்ணாவிற்கு விட்டுக்கொடுத்தார்.

மூட்டிவிட்ட பிக்பாஸ்: அதன் பின் வந்த ரவீனா, பிரதீப் என அடுத்தடுத்து விவாதம் செய்து கேப்டன் மேச்சை வாங்கினார்கள். போட்டியாளர்கள் வந்த முதல் நாளே முதல் கேப்டன் பதவிக்காக விவாதம் வைத்து போட்டியாளர்களை போடவிட்டுள்ளார் பிக் பாஸ். கடைசியில் கேப்டன் பதவியை யார் பெறப் போகிறார்கள் என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X