பிக்பாஸ் வீட்டின் கோழி அர்ச்சனா.. ரெண்டு நரிகள்.. யார் யாருன்னு பருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கோழி யார் நரிகள் யார் என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்டுகளுக்கு டாஸ்க் கொடுத்து கருத்துக்கணிப்பு நடத்தினார்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப் பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பல விதி மீறல்கள் நடந்ததாக ஹவுஸ்மேட்ஸ் ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டினர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்டுகளுக்கு கோழி நரியை வைத்தே ஒரு டாஸ்க் கொடுத்தார்.

நரி யார்? கோழி யார்?
அதாவது பிக்பாஸ் வீட்டில் நரி யார் கோழி யார் என்று ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவராய் கேட்டார். இதில் முதலில் ஆரம்பித்த அனிதா பிக்பாஸ் வீட்டின் கோழி அர்ச்சனா, நரி ஆரி என கூறினார்.

பாலா சொன்னது யாரை?
அவரை தொடர்ந்து வந்த ரம்யா கோழி அர்ச்சனா என்றும் நரி பாலா என்றும் கூறினார். ஆஜித்தும் கோழி அர்ச்சனா நரி பாலா என்று கூறினார். அடுத்து வந்த பாலா கோழி அர்ச்சனா என்றும் பிக்பாஸ் வீட்டின் நரி ஆரிதான் என்றும் கூறினார்.

ஆரி சொன்னது யாரை?
பின்னர் வந்த ஷிவானி கோழி அர்ச்சனா என்றும் நரி ஆரி தான் என்றும் கூறினார். ஆனால் ஆரி பிக்பாஸ் வீட்டின் நரி என்று அனிதாவையும் கோழி என்று அர்ச்சனாவையும் கூறினார். அடுத்து வந்த கேபி கோழி பாலா என்றும் நரி ரம்யா என்றும் கூறினார்.

அர்ச்சனா சொன்ன நரி
அவரை தொடர்ந்து சோம் பிக்பாஸ் வீட்டின் நரி பாலா என்றும் கோழி அர்ச்சனா என்றும் கூறினார். அர்ச்சனா கோழி என்று பாலாவை கூறினார். நரி என்று ஆரியை கூறினார். ரியோ கோழி அர்ச்சனாவையும் நரி என்று பாலாவையும் கூறினார்.

நரி இவர்தான்
இதில் அதிகளவாக கோழி பட்டத்தை அர்ச்சனா பெற்றார். நரி பட்டத்தை பாலாவும் ஆரியும் பெற்றனர். இதனைக் கேட்ட ரியோ ரெண்டு நரிகள் உள்ளதா இந்த வீட்டில் என்று அர்ச்சனாவிடம் மிரட்சியாக கூறினார்.

பாலாஜி ஃபுல் டிராமா
இதனை தொடர்ந்து பேசிய கமல், பாலாஜின் ட்ரான்ஸ்ஃபர்மேஷனை பாராட்டினார். மேலும் தான் செய்த தவறுக்காக தேடி பிடித்து மன்னிப்பு கேட்கிறார் என பாராட்டினார். ஆனால் பாலாஜி போடுவதெல்லாம் ஃபுல் டிராமா என்பது பார்வையாளர்களுக்கு புரியும்.


Click it and Unblock the Notifications











