நெப்போலியன் 2வது மகன் கல்யாணத்திற்கு ரெடியா? உடன் இருக்கும் அந்த பெண் யார்?

சென்னை: நவம்பர் மாதம் முழுக்க சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து இருந்தது நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம் பற்றிய செய்திதான். மூத்த மகனின் திருமணம் முடிந்த நிலையில், இளைய மகனின் திருமணம் குறித்த செய்தியை இணையவாசிகள் சோஷியல் மீடியாவில் பரவவிட்டு வருகின்றனர்.

napoleon gunal marriage

நடிகர் நெப்போலியன் ஹீரோவாக அறிமுகமாகி பின் வில்லனாக பல படத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் இவர் இணைந்து நடித்த எஜமான் படத்தில் இவரின் கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. அதே போல, கிழக்குசீமையிலே படத்திலும் ராதிகாவின் கணவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த நெப்போலியன் பின் திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ, எம்பி, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.

napoleon gunal marriage

நெப்போலியன் மகன்: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ், பிறந்த போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். ஆனால், அவருக்கு நான்கு வயது இருக்கும் போது, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பத்து வயதில் நடக்க முடியாத நிலைக்கு சென்றார். இதற்காக திருநெல்வேலியில் இயற்கை முறையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அது பலன் அளிக்காததால், மகனுக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா சென்ற நெப்போலியன் குடும்பத்தோடு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

napoleon gunal marriage

தடபுடலான திருமணம்: மூத்த மகன் தனுஷூக்கு திருமண வயதை நெருங்கியதை அடுத்து, திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை வசித்து வந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தனுஷ் இந்தியா வரமுடியாததால், அவர்களின் நிச்சயதார்த்தம் வீடியோ காலில் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த மாதம் 7ந் தேதி ஜப்பானில் தடபுடலாக நடைபெற்றது. தமிழ் பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் ராதிகா, சரத்குமார், குஷ்பு,மீனா, கலா மாஸ்டர் என பலர் கலந்து கொண்டனர். தற்போது நெப்போலியன் தனது குடும்பத்துடன் தனுஷின் ஆசைப்படி சுற்றுலா சென்றுள்ளார்.

napoleon gunal marriage

யார் அந்த பெண்: இந்நிலையில் நெப்போலியனின் இரண்டாவது மகன் குணால், ஜப்பானில் டூரில் ஆட்டம் போட்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் குணாலுடன் ஒரு பெண் இருக்கிறார். அந்த பெண்ணை பார்த்த இணையவாசிகள் நெப்போலியன் இரண்டாவது மகனும் திருமணத்திற்கு ரெடியாகி விட்டாரா என்றும், அந்த பெண் யார் என்று கேட்டு வருகின்றனர். இன்னும், சிலர், ஒரு பெண்ணுடன் இருக்கும் போட்டோவை போட்டா அது லவ்வா என்று கேட்டு வருகின்றனர்.

napoleon gunal marriage

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X