கோலிவுட்டின் சூப்பர் காதல் (கல்யாண) ஜோடிகள்

By Siva

சென்னை: கோலிவுட் நட்சத்திரங்களில் ஏராளமானோர் காதல் திருமணம் செய்துள்ளனர். அதில் 5 ஜோடிகளைப் பட்டியலிட்டுள்ளோம்.

கோலிவுட் நடிகர்கள், நடிகைகளின் நிஜ வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் விரும்புவார்கள். தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் ரியல் ஜோடி யார், அவர்களுக்கு எத்தனை குழந்தைகள், எத்தனை ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு அப்படி ஒரு ஆர்வம்.

படத்தில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்த தமிழ் நட்சத்திரங்கள் ஏராளம். அதில் 5 பேரை பட்டியலிட்டுள்ளோம். இதில் யார் கலக்கல் ஜோடி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அஜீத்-ஷாலினி

அஜீத்-ஷாலினி

ரீல் ஜோடியான அஜீத்-ஷாலினி 2000ம் ஆண்டில் ரியல் ஜோடி ஆனார்கள். திருமணமாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார்.

விஜய்-சங்கீதா

விஜய்-சங்கீதா

இளைய தளபதி விஜய் சங்கீதாவை காதலித்து மணந்தார். 1999ம் ஆண்டில் திருமணமான அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.

சூர்யா- ஜோதிகா

சூர்யா- ஜோதிகா

ரீல் ஜோடியாக கலக்கி வந்த சூர்யா, ஜோதிகா 2006ல் ரியல் ஜோடியானார்கள். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

ஜீவா-சுப்ரியா

ஜீவா-சுப்ரியா

ஜீவா தனது பள்ளித் தோழியான சுப்ரியாவை காதலித்து 2007ம் ஆண்டில் மணந்தார். அவர்களுக்கு ஸ்பர்ஷ் என்ற மகன் உள்ளான்.

ஜெயம் ரவி- ஆர்த்தி

ஜெயம் ரவி- ஆர்த்தி

ஜெயம் ரவி தனது காதலி ஆர்த்தியை 2009ல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆரவ் என்ற குட்டிப் பையன் உள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X