வளர்ந்து வரும் நடிகரை தன் அடுத்த படத்திற்கு தேர்வு செய்துள்ளாரா மிஷ்கின்!?

சென்னை: இயக்குனர் மிஷ்கின் துப்பறிவாளன் 2ம் பாகத்தில் இருந்து விலகிய பிறகு பிசாசு 2 படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

ஆன்ட்ரியாவின் முன்னனி நடிப்பில் பிசாசு 2 தயாராகி வருகிறது. ஆண்ட்ரியா மட்டுமன்றி பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

மும்முரமாக பணி

மும்முரமாக பணி

சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் துப்பறிவாளன் 2ம் பாகத்தை இயக்க இருந்த நிலையில் நடிகர் விஷால் உடனான பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகினார். யாரும் எதிர்பாராத வகையில் பிசாசு 2 படத்திற்கான பணிகளை மும்முரமாக தொடங்கினார்.

கதைக்கு அவசியம்

கதைக்கு அவசியம்

இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாண காட்சியில் நடிக்கவிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படக்குழு இது குறித்து ஏதும் அறிவிப்பு கொடுக்கவில்லை.

மிஷ்கின் - அதர்வா

மிஷ்கின் - அதர்வா

இந்நிலையில் பிசாசு 2 படத்திற்கு பிறகு மிஷ்கின் யாருடன் இணைந்து பணியாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் வளர்ந்து வரும் நடிகர் அதர்வா உடன் மிஷ்கின் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதர்வா தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் தள்ளிப்போகாதே படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் படத்தில் நடித்து வருகிறார். சாம் ஆண்டன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். மிஷ்கின் உடன் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: myskin மிஷ்கின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X