கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, அருண் பிரபு யாருக்கு அடிக்கப்போகுது யோகம்?
Recommended Video

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு என்பதுதான் இந்திய சினிமாவின் எல்லா இயக்குநர்களின் கனவாகவும் இருக்கும். சமீபகாலமாக தன்னை இயக்க சீனியர்களுக்கு நிகராக ஜுனியர்களுக்கும் வாய்ப்பளிக்கிறார் சூப்பர் ஸ்டார்.
சில ஆண்டுகளாகவே இளம் இயக்குநர்கள் அதிக அளவில் உள்ளே நுழைந்து கலக்குகிறார்கள். அப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அரசியலை பேசிய பா. ரஞ்சித்துக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுத்தார்.

இப்போது அடுத்தும் ஒரு அதிரடி அரசியல் படத்தில் நடிக்க விரும்புபவர், அதற்காக சில இயக்குநர்களை அழைத்து கதை கேட்டதாக தகவல்கள் வருகின்றன. கார்த்திக் சுப்புராஜ், அருண் பிரபு, அட்லீ ஆகிய மூவரையும் தனித்தனியாக அழைத்து கதை கேட்டிருப்பதாகவும் மூவருக்குமே தகவல் சொல்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பியுள்ளதாகவும் செய்தி வருகிறது.
மூவரில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிகப்போகிறது என்று பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











