துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆவாததற்கு இவங்கதான் காரணம்.. யார் மேல் தவறு?
சென்னை : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம்.
ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைலிஷாக உருவாகி வந்த இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரிது வர்மா,ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார்கள்
துருவ நட்சத்திரம் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளம்பிய நிலையில் இன்று வரை படம் ரிலீஸ் ஆவாததற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

ஹாலிவுட் தரத்தில்
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து தன்னுடைய ரசிகர்களை திருப்திப்படுத்தி வருபவர் நடிகர் விக்ரம் . அந்த வகையில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைலிஷாக உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரும்பாலும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டது. விக்ரம் இதுவரை பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் துருவ நட்சத்திரம் படத்தில் முற்றிலும் வித்தியாசமான ரோலில் நடித்திருந்தார். விக்ரம் பார்ப்பதற்கு டிடெக்டிவ் ஏஜென்ட் போல இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் மிரட்டியது

வில்லனாக நடித்து
விக்ரமுக்கு ஜோடியாக இந்த படத்தில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கின்றனர். கைதி படத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ் இந்த படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். துருவ நட்சத்திரம் ட்ரைலரில் விக்ரம் மற்றும் அர்ஜுன் தாஸ் பேசிக்கொள்ளும் வசனங்கள் இடம் பெற்றிருக்கும் . இந்த வசனம் மிகப் பிரபலமானது. அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகிவந்த துருவ நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலருடன் அப்படியே நிற்கிறது. அதைத் தொடர்ந்து இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு வெளியாகவில்லை.

ரிலீஸ் ஆவாததற்கு காரணம்
விக்ரம் அதற்குப் பின்பு நடித்த படங்கள் கூட ரிலீஸ் ஆகி விட்டது. ஆனால் துருவ நட்சத்திரம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர். இந்த நிலையில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆவாததற்கு காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது இயக்குனர் கௌதம் மேனன் படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகள் இன்னும் இருக்கின்றது என நடிகர் விக்ரமை கேட்டுள்ளாராம்.

ஈகோ மோதல்
ஆனால் விக்ரம் இந்த படத்தில் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டேன். நீங்கள் படத்தை எடிட் செய்து விட்டு கூப்பிடுங்கள் நான் வந்து டப்பிங் பேசி தருகிறேன் அதன்பிறகு எடுக்கவேண்டிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் நடித்துக் கொடுக்கிறேன் என கூறியுள்ளாராம். இவ்வாறு இருவருக்குமிடையே நடக்கும் ஈகோ மோதல் தான் இப்படம் இன்னும் ரிலீஸ் ஆவதற்கு காரணமாம்.


Click it and Unblock the Notifications











