அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
சென்னை: விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், அவர் சினிமாவில் இருந்து விலக உள்ளதால், சினிமாவில் காலியாகும் விஜய்யின் இடத்திற்கு யார் வருவார் என்ற சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். இது சோஷியல் மீடியாவில் தற்போது புயலை கிளப்பி உள்ளது.
கோடான கோடி ரசிகர்கள் மனதில் குடிகொண்டு இருக்கும் நடிகர் விஜய். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும் செய்து வந்தார். இதையடுத்து கடந்த மாதம், இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் கூறி விஜய், வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

தமிழக வெற்றிக்கழகம்: அந்த அறிக்கையில் என்னை பொறுத்தவரை அரசியல் மற்றொரு தொழில் அல்ல, அது புனிதமான மக்கள் பணி. எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றும், அத்துடன் என் சார்பில் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவையில் ஈடுபடுவேன் என அறிவித்திருந்தார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ரசிகர்கள் கவலை: நடிகர் விஜய் தி கோட் படத்திற்கு அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்குப் பிறகு விஜய் அரசியலுக்கு வருகை தர இருப்பதால் இதுவே விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க கூறப்படுகிறது. ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கவும் விஜய்யின் கடைசி படமாக இருப்பதால் இந்தப் படத்திற்கு விஜய் தனது சம்பளத்தை பலமடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்த விஜய் யார்?: இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சப்ரமணியம் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், விஜய் அரசியலுக்கு வருவதால், சினிமாவை விட்டு விலக உள்ளார். அவர் விலகுவதால், விஜய் இடத்தை எந்த நடிகர் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த திருப்பூர் சப்ரமணியம்,
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரசிகர்கள் கூட்டத்தை கூட்டலாம், அதேபோல் தனுஷ், சூர்யா உட்பட பலரும் ரசிகர் கூட்டத்தை கூட்டி வருகின்றனர்.ஆனால் ரசிகர் கூட்டத்தை கூட்டுவதால் விஜய்யின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது, விஜய்யின் உயரமே வேறு என பதில் அளித்துள்ளார். இவரின் இந்த பதில் தற்போது விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











