கமலுக்கு ஜோடி யார்? விக்ரம் பட புதிய அப்டேட்

சென்னை : கமலஹாசனின் 232வது திரைப்படமாக உருவாகும் விக்ரம் திரைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்க, ராஜ்கமல் தயாரிப்பில் வெளியாகிறது. பகத்ஃபாசில், விஜய்சேதுபதி என பலர் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கமலஹாசனின் பிறந்தநாளை ஒட்டி, சின்ன ப்ரேக் விட்டிருந்த விக்ரம் டீம், அடுத்தகட்ட படபிடிப்புக்கு தயாராகிவிட்டது. நிறைய வீடியோக்களும் செய்திகளும் அவர் பிறந்த நாளில் வெளியாகும் என்று காத்திருந்தவர்களுக்கு கிடைத்தது போஸ்டர் லுக் க்ளான்ஸ் மட்டுமே.

மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன் போன்ற பலமான குணச்சித்திர நடிகர்கள் நடிக்க உள்ள விக்ரம் திரைப்படத்தில், கமலஹாசனுக்கு ஜோடி கிடையாது என்றும் சில வதந்திகள் பரவி வந்தது.

ஓடிடியில் வருமா?

ஓடிடியில் வருமா?

பல நல்ல திரைப்படங்களும் ஓடிடியில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் மன நிலையோ புரிந்துகொள்ளமுடியாததாகவே இருக்கிறது. ஓடிடியில் வந்தால் தியேட்டரில் ரிலீஸாகி இருக்கலாம் என்றும், தியேட்டரில் ரிலீஸ் ஆனால், அவ்வளவாக தியேட்டருக்கு சென்று பார்க்காமலும், ஓடிடியிலேயே வந்திருக்கலாம் என்று சொல்வதும், வழக்கமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் வெளியான வினோதயசித்தம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் வெளிவந்ததால் நிறைய பேரை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள " அரண்மனை 3" படமும் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் -க்கு கிடைத்த வரவேற்பைப் போல விக்ரம் படத்திற்கும் கிடைக்கும், அதனால் ஓடிடியிலேயே ரிலீஸ் செய்யலாம் என்றும் ஒரு பக்கம் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

கமலுக்கு ஜோடி இல்லையா?

கமலுக்கு ஜோடி இல்லையா?

விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி உண்டா இல்லையா என்ற செய்தியே பரபரப்பாக இருந்தது. ஒரு வேளை இருந்தால், யார் கமலுக்கு ஜோடி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஆவலை அதிகரித்தபடி இருந்தது. கடைசியாக கமலுக்கு ஜோடி உண்டு என்று தகவல்கள் கசிந்துள்ளது. பிக்பாஸில் பிசியாக இருந்தாலும் விக்ரமுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் கமல் அடுத்த ஷூட்டிங்கிற்கும் தயாராகிவிட்டார்.

அடுத்தமாதத்தோடு முடியும் விக்ரம்

அடுத்தமாதத்தோடு முடியும் விக்ரம்

இந்த நிலையில் சென்னையில் அடுத்தகட்ட படபிடிப்பு நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமலுக்கு ஜோடியாக ஒரு பிரலமான நடிகையை தேர்வு செய்துள்ள விக்ரம் படக்குழு, இன்னும் அதை ரகசியமாகவே வைத்துள்ளது. அடுத்தமாதத்தோடு விக்ரம் பட ஷூட்டிங் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. தீபாவளி பரிசாக வந்த அண்ணாத்த படம் அவ்வளவாக திருப்திகரமாக இல்லை என்று ரஜினி ரசிகர்களே வருத்தப்பட்டது நாடறிந்த ஒன்று. கமல் ரசிகர்களுக்கு ஏப்ரல் மாதம் பரிசாக வர இருக்கும் விக்ரம் திரைப்படம், ஏப்ரல் ஃபூலாக இல்லாமல், தமிழ்புத்தாண்டு கொண்டாட்டமாக இருக்கும் என நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

படத்தின் கதாநாயகி

படத்தின் கதாநாயகி

கமல் ஜோடியாக கோவைசரளா நடித்து சதிலீலாவதி இன்று வரை யாராலும் மறக்க முடியாத படம் ஆகும் .வித்யாசமான திறமைகளை அடையாளம் கண்டு சரியாக பயன் படுத்துவதில் கமல் கை தேர்ந்தவர் . அந்த வகையில் விக்ரம் படத்தின் கதாநாயகி கண்டிப்பாக ஒரு அதிர்ஷ்டசாலி மட்டும் அல்லாமல் மிகவும் திறமை மிக்கவராக தான் இருப்பார் என்பதில் நிறைய கருத்துக்கள் நிலவி வருகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம் விரைவில் இன்னும் நிறைய அப்டேட்ஸ் வர இருக்கிறது . ஒரு வேலை எந்த ஜோடியும் இல்லாமலும் போகலாம் ஆனால் நிறைய முக்கிய பெண் கதாபாத்திரங்கள் உண்டு என்பது தான் நிதர்சனமான உண்மை .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X