»   »  விஜய்யின் 60வது படத் தயாரிப்பாளர் யார்?

விஜய்யின் 60வது படத் தயாரிப்பாளர் யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் 60 படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் குறித்து நாளொரு யூகங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இப்போது அட்லீ இயக்கத்தில், தாணுவின் தயாரிப்பில் நடிக்கும் விஜய், அடுத்து ஏஎம் ரத்னம் தயாரிப்பார் என்று கூறப்பட்டது. எஸ்ஜே சூர்யா அல்லது வெங்கட் பிரபு இருவரில் ஒருவர் இந்தப் படத்தை இயக்குவார்கள் என்றும் தகவல் பரவியது.

Who is the producer of Vijay 60?

ஆனால் இப்போது படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் இல்லை.. விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ்தான் விஜய் 60-ஐ தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்கள்.

விஜயா வாகினி நிறுவனம் கடைசியாக அஜித்தின் வீரம் படத்தைத் தயாரித்திருந்தது.

விஜய் இரட்டைவேடங்களில் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இந்தப் படத்துக்கு கதை எழுதியுள்ளாராம். இயக்கப் போவது வெங்கட் பிரபுவா எஸ்ஜே சூர்யாவா என்பது இந்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

English summary
Sources say that Vijay's 60th movie will be produced by Vijaya Vahini Productions and the official announcement is expecting this week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil