இந்தியன் 2 அட்டர் ஃப்ளாப்பா? கமல் சொல்லியும் கேக்கல! இப்ப எல்லாம் ஷங்கர் தலையில விடியுது!

சென்னை: லைகா நிறுவனத்திற்கு இந்த சீசன் பெருத்த அடி வாங்கும் சீசனாகவே மாறிவிட்டது எனக் கூறும் அளவிற்கு லைகா நிறுவனம் அடிவாங்கிக் கொண்டு உள்ளது. பொன்னியின் செல்வன் 2, லால் சலாம் ஆகிய படங்களில் பெருத்த நஷ்டத்தை சந்தித்தது. ஆனாலும் இந்தியன் 2 படத்தின் மீது லைகா நிறுவனம் பெரும் நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் இந்தியன் 2 படமும் தோல்வியைச் சந்தித்துவிட்டது எனக் கூறும் அளவிற்கு விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றது.

இந்தியன் 2 படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இன்றுடன் படம் ரிலீஸ் ஆகி 6 நாட்கள் ஆகின்றது. படத்தின் முதல் ஐந்து நாள் வசூல் விபரம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் இதுவரை கிட்டத்தட்ட ரூபாய் 65 கோடிகளை படம் வசூல் செய்துள்ளது என்பதுதான். ஆனால் இந்த வசூல் விபரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக எதுவுமே சொல்லவில்லை. படத்தின் வசூல் படக்குழு நினைத்ததைப் போல் இருந்திருந்தால் தினமும் வசூல் குறித்த அப்டேட்டுகளை படக்குழு தரப்பில் இருந்தே வழங்கப்பட்டிருக்கும்.

Indian 2 Shankar KamalHaasan

ஆனால் படக்குழு தரப்பில் இருந்து, இதுபோன்று எந்தவிதமான வழங்கப்படவில்லை. ஊடகங்களில் வெளியான தகவலைப் பார்க்கும்போது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தின் அளவுக்கு கூட படம் வசூல் செய்யவில்லை என பேச்சுகள் அடிபடுகின்றது. படத்தின் இந்த தோல்விக்கு படத்தின் இயக்குநர் ஷங்கர் தான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. ஷங்கரைக் காரணம் காட்டி கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றது.

நோ சொன்ன கமல்: முதல் படத்தினை மூன்று பாகங்களாக எடுப்பதில் கமல்ஹாசனுக்கு விருப்பமே இல்லையாம். மூன்று பாகங்களாக படத்தினை டெவலப் செய்யலாம் என கமலிடம் கூறியபோது, கமல் வேண்டாம் எனக் கூறியதாகவும், என்னிடம் நீங்கள் கூறிய இந்தியன் 2 படத்தினையே கதையாக எடுத்துக் கொடுங்கள் போதும் எனவும் கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணம், இந்தியன் 2 படத்தினை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கமல் யோசித்ததாக கூறப்படுகின்றது.

Indian 2 Shankar KamalHaasan

படம் தேராது: அதேபோல், படத்தின் எடிட்டரும் படம் நாம் ஏற்படுத்திய பில்டப்புக்கு இல்லை எனவும், ஏற்கனவே வெளியான இந்தியன் படத்தின் ரசிகர்களை இந்த படம் திருப்தி படுத்தாது எனவும் லைகாவிடம் கூறியதாக கூறப்படுகின்றது. படத்தின் பின்னணி இசை அமைக்கப்பட்டபோது படத்தினைப் பார்த்த அனிருத், இந்த படம் தேராது என லைகாவிடம் கூறியதாக கூறப்படுகின்றது.

நோ யூஸ்: லைகாவும் கமல் ஹாசனும் ஷங்கரிடம் எவ்வளவோ பேசியும், ஷங்கர் ஒப்புக்கொள்ளவே இல்லை என கூறப்படுகின்றது. மேலும் ஒரு கட்டத்தில் ஷங்கர் கூறுகின்றார் என்பதற்காகவே அவரை நம்பி மூன்றாம் பாகத்திற்கு ஒப்புக்கொண்டனர் எனவும், இந்தியன் 2 படத்தினை ரிலீஸ் செய்யலாம் எனவும் லைகா முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.

Indian 2 Shankar KamalHaasan

ஷங்கர் தலையில் விடியுது: படத்தின் புரோமோசனுக்காக படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் 15 நாட்களும் ரிலீஸ்க்குப் பின்னர் 15 நாட்களும் கமல் ஒதுக்கியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது. ரிலீஸ்க்கு முன்னர் அதிரடியாக புரோமோசன் வேலைகளில் ஈடுபட்ட கமல், தற்போது புரோமோசனில் கலந்து கொள்வது இல்லை எனக் கூறப்படுகின்றது. இதற்கு காரணம் ஷங்கர்தான் எனவும் கூறப்படுகின்றது. மூன்று பாகங்கள் வேண்டாம், என்னிடம் கூறிய இரண்டாவது பாகத்தை மட்டும் எடுத்துக் கொடுங்க ஷங்கர் என நான் இதுக்குதான் தலையிலயே அடிச்சுக்கிட்டேன், இப்ப பாருங்க என்ன ஆச்சுனு என பொருள்படும்படி கமல் ஷங்கரிடம் பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் தற்போது எல்லா பிரச்னையும் ஷங்கர் தலையில் விடிந்துள்ளது.

Indian 2 Shankar KamalHaasan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X