'மாநாடு'அடுத்த அப்டேட்.. வில்லன் யார் தெரியுமா?

சென்னை: சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் அடுத்த ஷூட்டிங் செட்யுல் துவங்கியது.

Recommended Video

Maanadu Kick Starts Shooting | Simbhu | Venkat Prabhu | Annathe | D. Imman

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட படம் தான் மாநாடு. இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது சிம்பு ஷூட்டிங் வரவில்லை என்று தயாரிப்பாளர் சார்பில் சொல்லப்பட்டது.

பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து இப்படம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொங்கல் அன்று இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அப்டேட் டஜன் கணக்கில் வந்து குவிந்தது.

Who is the villain in Maanadu

அதன் படி அன்று டிவிட்டரே அதிரும் படி அப்டேட் வந்து கொண்டு இருந்தது. பல மணி நேரமாக மாநாடு படம் டிரெண்ட்டாகி வந்தது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது மட்டுமே அன்று வெளியானது.

மேலும் படத்தின் பூஜை மற்றும் படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. பூஜை போடப்பட்ட அன்று இயக்குனர் சேரன் கிளாப் போர்ட் அடிக்க ஒரு சீன் படமாக எடுக்கப்பட்டது. தற்போது மாநாடு படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் முடித்த கையோடு படக்குழு ஆந்திராவில் படத்தை எடுத்து வருகின்றனர்.

Who is the villain in Maanadu

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில நாட்களுக்கு முன்பு படத்தில் உள்ள இசை பற்றி ஒரு அப்டெட்யை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது மாநாடு படத்தில் உள்ள பாடல்களை கேட்டேன். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு சிறந்த இசையை வழங்கியுள்ளார், என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்து இருந்தார்.

தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங்யை படக்குழு துவங்கியுள்ளது, அதில் எஸ். ஜே. சூர்யா, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், மனோஜ் பாரதிராஜா, பிரேம் ஜி போன்ற பலர் நடிக்கவுள்ளனர் அவர்கள் ஒரு குழுவாக எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Who is the villain in Maanadu

இந்த புகைப்படத்தை பார்த்ததும் பலரும் எஸ். ஜே. சூர்யா தான் வில்லன் என்று கூறி வருகின்றனர். ஆனால் படக்குழுவினரிடம் இருந்து எந்த விதமான அப்டெடும் இந்த செய்தியை பற்றி வரவில்லை. இவர் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்து சில நாட்கள் கடந்த நிலையில் நேற்று தான் இவரது போர்ஷனை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X