பிக் பாஸ் அல்டிமேட்… வெற்றியாளர் யாராக இருப்பார்… இப்போவே எதுக்கு இந்த கேள்வி !
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிகழ்ச்சி, 15 நாட்களை நடந்து தற்போது நிகழ்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது.
இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், தனது,ட்விட்டர் பக்கத்தில் தற்போதைய நிலவரப்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாராக இருப்பார் என்ற கேள்வியை கேட்டுள்ளது. இதற்கு பல ரசிகர்கள் பதிலளித்துள்ளனர்.

சொன்னா மாத்திடுவீங்க
எதுக்கு இப்போவே இந்த கேள்வியை கேக்குறீங்க, நீங்க தான் முடிவு செய்து இருப்பீர்களே என்பது போல பலர் பதில் கூற, ஒரு நெட்டிசன்ஸ், சொன்னா மாத்திடுவீங்க அங்கிள், சொல்ல மாட்டேன் போ. என பதிவிட்டுள்ளார்.

தாமரைக்கு வாய்ப்பு
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தாமரைக்கு அதிகவாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு நெட்டிசன்ஸ், வெற்றியாளர் பெரும்பாலும் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களாக தான் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் சமீபத்தில் மக்கள் மனதில் பதிந்தவர்கள். பெரும்பாலும் தாமரை அல்லது நிரூப். ஓவியா வைல்ட் கார்டாக நுழைந்தால் ஓவியா, பாலாஜிமுருகதாஸ் உட்பட யாருக்கும் வாய்ப்பே இல்லை. என பதிவிட்டுள்ளார்.

இப்போவே கேக்குறீங்க
பிக் பாஸ் சீசன் 4ல் 2வது இடம் பிடித்த பாலாஜியின் பெயரை பலரும் கூறியுள்ளனர். ஒரு இணையவாசி, இதையென் இப்போவே கேக்குறீங்க, இத வெச்சு எதுவும் பிளான் பண்ணாம இருந்தா சரி... இந்த முறையாவது மக்களின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. வெற்றியாளர் பாலாஜிமுருகதாஸ் மட்டுமே. என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

12 பேர் மட்டுமே
சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில், சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வெளியேறியதை அடுத்து தற்போது வீட்டில் 12 போட்டியாளர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











