யாரு இந்த ரஞ்சனா நாச்சியார்?.. இயக்குநர் பாலாவுக்கும் இவருக்கும் இப்படியொரு உறவா?.. இத்தனை படங்கள்!

சென்னை: பேருந்தில் மாணவர்கள் தொங்கிக் கொண்டும், ஃபுட் போர்ட் அடித்துக் கொண்டும் உயிருக்கே ஆபத்தான சூழலில் வந்துக் கொண்டிருந்த போது பேருந்தை நிறுத்தி டிரைவர் மற்றும் கன்டக்டரை திட்டி மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்ட ரஞ்சனா நாச்சியார் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

துணை நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான ரஞ்சனா நாச்சியார் செய்த செயலுக்கு பாராட்டுக்களும் அதே சமயத்தில் மாணவர்களை எப்படி கை நீட்டி அடிக்கலாம் என எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்நிலையில், இன்று காலை அவரை அதிரடியாக போலீஸார் வீட்டுக்கே சென்று கைது செய்தனர். துணை நடிகையான ரஞ்சனா நாச்சியார் ரஜினிகாந்தின் அண்ணாத்த உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் பாலாவின் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Who is this Actress Ranjana Nachiyar and how she connect with DIrector Bala

ரஞ்சனா நாச்சியார் கைது: மாணவர்களை இப்படி கண்டித்தால் தான் அவர்கள் உயிருக்கு எந்தவித ஆபத்தும் நேராது என்றும் ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய காட்டிய ஆர்வத்தில் கொஞ்சம் கூட அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது அரசு ஏன் செலுத்தவில்லை என்றும் படியில் பயணம் நொடியில் மரணம் என எழுதிப்போட்டால் மட்டும் போதாது. படியில் மாணவர்களை பயணம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை நடத்துனருக்குத்தானே உள்ளது என பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் ரஞ்சனா நாச்சியார் கைதுக்கு பிறகு கிளம்பி உள்ளது.

ஸ்டன்ட் செய்து மாட்டிக் கொண்டார்: திடீரென எதையாவது செய்ய வேண்டிய சூழ்நிலையில், இப்படியொரு ஸ்டன்ட்டை செய்து நடிகை ரஞ்சனா நாச்சியார் வசமாக மாட்டிக் கொண்டார் என்றும் மாணவர்களுக்கு புத்தி புகட்டாமல் அவர்களை தண்டிப்பது மிகவும் தவறான விஷயம் என்றும் நாச்சியாருக்கு எதிரான கருத்துக்களும் பரவி வருகின்றன.

இத்தனை படங்களில்: துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக அறிமுகமான ரஞ்சனா நாச்சியார் இரும்புத்திரை, அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவி புகழ் நடித்து வரும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறார்.

பாலாவின் அண்ணன் மகள்: பொறியியலில் எம்.எஸ்.சி, எம் டெக் மற்றும் எல்எல்பி (ஹானர்ஸ்) போன்ற படிப்புகளை படித்துவிட்டு கலைத்துறை மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவுக்குள் நுழைந்த ரஞ்சனா நாச்சியார் இயக்குநர் பாலாவின் உடன் பிறந்த அண்ணனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X