Dagaalty சந்தானம் எப்பேர்பட்ட 'டகால்டி' தெரியுமா?: இயக்குநர்

By Siva

சென்னை: டகால்டி சந்தானம் பற்றி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விஜய் ஆனந்த்.

ஷங்கரிடம் உதவியாளராக இருந்த விஜய் ஆனந்த் இயக்கியுள்ள டகால்டி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் சந்தானம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. #Dagaalty என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது.

டகால்டி

டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறேன் என்று அறிவித்துவிட்டு செகண்ட் லுக் போஸ்டரையும் கையோடு வெளியிட்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை அளித்தார்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் சர்கார் பட போஸ்டரை நினைவூட்டியதாக தளபதி ரசிகர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தம்மடித்தபோது மட்டும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சந்தானத்தை ஏன் எதுவும் கேட்கவில்லை என்ற அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 சந்தானம்

சந்தானம்

டகால்டி முழுக்க முழுக்க காமெடி படம் இல்லை. படத்தில் காமெடியும் இருக்கும். இது சந்தானத்தின் பிற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். சந்தானத்தின் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவர் மும்பையில் செட்டில் ஆன தமிழ் பையனாக நடித்துள்ளார் என்று விஜய் ஆனந்த் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மும்பை

மும்பை

டகால்டி படத்தின் ஷூட்டிங் சென்னை, மும்பை, புனே, ஆந்திரா, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இந்த படம் மூலம் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரித்திகா சென் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தில் அவர் தென்னிந்திய பெண்ணாக நடித்துள்ளார் என்கிறார் விஜய் ஆனந்த்.

ரிலீஸ்

ரிலீஸ்

டகால்டி படத்திற்கு ஸ்டண்ட் சில்வா ஆக்ஷன் காட்சிகளை உருவாக்கியுள்ளார். சில காட்சிகளை பார்க்கும் போது ஜாக்கி சானின் சண்டை காட்சிகள் நினைவுக்கு வரும். ஹீரோ அடித்த உடன் பத்து பேர் காற்றில் பறக்கும்படியான சண்டை காட்சிகள் இந்த படத்தில் இருக்காது. காமெடி கலந்த சண்டையாக இருக்கும் என்று விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். டகால்டி படத்தில் நடித்ததுடன் 18 ரீல்ஸுடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்துள்ளார் சந்தானம். இந்த படத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் விரைவில் ரிலீஸ் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X