ஊமை ராணி யார்? நந்தினியின் தந்தை வீரபாண்டியனா? குழப்பமா இருக்கா அப்போ இதைபடிங்க!

சென்னை : பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்த பலருக்கு ஊமை ராணி யார் என்று தெரியும். ஆனால், படம் பார்த்த பலர் யார் அந்த ஊமை ராணி என ஆராயத் தொடங்கி உள்ளனர்.

அதாவது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அருண்மொழிவர்மன் (ஜெயம் ரவி) வந்தியத்தேவனை (கார்த்தி) இருவரும் கப்பலில் நடைபெறும் சண்டையில் சிக்கியில் தண்ணீரில் மூழ்கிவிடுகிறார்கள்.

அவர்களை ஊமை ராணி காப்பாற்றுவது போல காட்சி வந்து இரண்டாம் பாகம் விரைவில் என டைட்டில் கார்டு வரும். உண்மையில் அருண்மொழிவர்மனை பாதுகாக்கும் அந்த ஊமை ராணி யார்? எதற்காக அவரை பாதுகாக்கிறார் என்பதை பார்க்கலாமா?

அருள்மொழி வர்மன்

அருள்மொழி வர்மன்

அருள்மொழி வர்மன் சிறுவயதில் பொன்னி நதியில் விழுந்துவிடுவார் அப்போது ஒரு பெண் அவரை காப்பாற்றுவார் இதனால், அருள்மொழிக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயரும் வந்தது. ஆனால், தன்னை காப்பாற்றிய பெண் ஊமை ராணி என்பதும் தனக்கு ஆபத்து வரும் போதெல்லாம் அந்த பெண் வந்து காப்பபாற்றுகிறார். இதனால், அருள்மொழியும் அவள் யார் தன்னை ஏன் காப்பாற்றுகிறார் என்ற கேள்வி மனதிற்குள் பலமுறை எழுந்துள்ளது.

மந்தாகினி தேவி

மந்தாகினி தேவி

ஊமை ராணியின் உண்மையான பெயர் மந்தாகினி தேவி. இவர் இலங்கையில் படகோட்டும் குடும்பத்தை சேர்ந்தவர். இலங்கை வரும் சுந்தர சோழனுக்கு (பிரகாஷ் ராஜ்) மந்தாகினி மீது காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் மந்தாகினியும், சுந்தர சோழரும் பிரிந்து விடுகின்றனர்.

திருமணமாகிவிடுகிறது

திருமணமாகிவிடுகிறது

சுந்தர சோழரின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத மந்தாகினி சோழநாட்டுக்கு வந்து சுந்தர சோழனை சந்திக்க முயற்சி செய்கிறார். ஆனால், சுந்தரசோழருக்கு வானவன் மகாதேவியுடன் திருமணமாகி குழந்தைகள் இருப்பதை தெரிந்து கொள்கிறாள். சுந்தர சோழரை சந்திக்க பலமுறை முயன்றும் முடியாமல் போனதால் பித்துபிடித்த பெண்போல அலைகிறாள் மந்தாகினி.

மந்தாகினியின் திருமணம்

மந்தாகினியின் திருமணம்

இதனால், பொன்னிநதி குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார் மந்தாகினி அப்போது வீரபாண்டியன் அவளை காப்பாற்றி மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்கிறார். இதையடுத்து, மந்தாகினியும் வீரபாண்டியனும் திருமணம் செய்து கொள்கிறார்கள் இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நந்தினி (ஐஸ்வர்யா) மற்றும் மதுராந்தக தேவரும் (ரகுமான்).

வீரபாண்டியன் நந்தினியின் அப்பாவா?

வீரபாண்டியன் நந்தினியின் அப்பாவா?

இந்த உண்மை தெரிந்ததால் தான் நந்தினியும் மதுராந்தகரும் இணைந்து சதிகளை செய்து நாட்டை கைப்பற்ற நினைக்கிறார்கள். நந்தினி (ஐஸ்வர்யா ராய்) மந்தாகினி போல இருக்க இதுதான் காரணமாகும். அருண்மொழி சுந்தர சோழனின் மகன் என்பதால், மந்தாகினி அவருக்கு ஆபத்து வரும் போதெல்லாம் துணை நின்றுகாத்து வருகிறார். அப்போ வீரபாண்டியன் நந்தினியின் அப்பாவா? அப்போ நந்தினி பாண்டிய நாட்டை சேர்ந்தவளா? என பல கேள்வி உங்கள் மனதிற்குள் வருகிறதா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X