யாரும்மா இந்த எஸ்.மது?
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் சார்பாகத் தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'.
ரத்தின குமார் தான் இயக்கிய 'மது' என்கிற குறும்படத்தைத்தான் தற்போது 'மேயாத மான்' என்கிற படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வைபவ், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெறும் 'எஸ்.மது...' எனும் முகவரிப் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடலின் வரிகள் ஒரு பெண்ணின் வீட்டு முகவரியை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை ரத்தின குமார் மற்றும் விவேக் எழுதியிருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணனே பாடியும் இருக்கிறார்.
பெண்களின் பெயரைக் குறிப்பிட்டு உருவாகும் பாடல்கள் அதே பெயரில் இருக்கும் பெண்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதுண்டு. இந்தப் பாடலில் வரும் எஸ்.மதுவை பொத்தாம்பொதுவாகச் சொல்லாமல் அவரது முகவரியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். எது எப்படியோ எஸ்.மது எனப் பெயர்கொண்ட பெண்கள் கொஞ்ச நாளைக்கு ரொம்பப் பாவம்தான்.


Click it and Unblock the Notifications











