பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்.. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் புகழ்ந்த போட்டியாளர்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர்தான் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கியது. 80 நாட்களை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் முதல் நாளே பங்கேற்றனர்.

அடுத்த இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்தனர். இதுவரை 9 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

யார் டைட்டில் வின்னர்?

யார் டைட்டில் வின்னர்?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபினாலேவை கொண்டாட இன்னும் 4 வாரங்களுக்கும் குறைவாகவே நாட்கள் உள்ளன. பிக்பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களில் யார் டைட்டில் வின்னர் என்பதில் கடுமையான போட்டி உள்ளது.

ஆரிக்கு அதிக ஆதரவு

ஆரிக்கு அதிக ஆதரவு

குறிப்பாக ஆரி, பாலாஜி, ரியோ என மூன்று பேருக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும் ஆரி, நேர்மையாக விளையாடுகிறார். யாரையும் காயப்படுத்தாமல் யார் குறித்தும் தவறாக பேசாமல் இருந்து வருவதால் அவருக்கான ஆதரவு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன்

திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஆரிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன், பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 ஆச்சரியமாக இருக்கிறது

ஆச்சரியமாக இருக்கிறது

அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஆரி டைட்டில் வின்னர். அது வேறு விஷயம். ஆனால், இவர் அனைவரின் பகைமையை தேடி கொண்டு அதை எப்படி சிறப்பாக சமாளிக்கின்றார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!

நினைத்து பார்க்க முடியவில்லை

நினைத்து பார்க்க முடியவில்லை

ஒரு வீட்டில் எல்லோரும் உங்களை வெறுக்கிறார்கள், உங்களை ஏமாற்றுகிறார்கள், உங்களை குற்றம் சாட்டுகிறார்கள், உங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்றால் நான் அந்த வீட்டில் இருப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. கடந்த 75 நாட்களாக இவற்றையெல்லாம் எதிர்கொண்ட போதிலும், அவர் இன்னும் தகுதிகள் குறித்து விவாதித்து வருகிறார்.

சுயமரியாதை போராட்டம்

சுயமரியாதை போராட்டம்

அவர் பிரச்சினைகளைத் தாக்குகிறார், ஆனால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தாக்குகிறார்கள். வழக்கமான உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில், உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன. ஈகோக்கள் பெருகுகின்றன. சுயமரியாதை போராட்டம் நடக்கிறது.

இரும்பு மனிதரைப் போல்

இரும்பு மனிதரைப் போல்

உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களில் நீங்கள் முரணாகி விடுகிறீர்கள். மேலும் நீங்கள் முடிக்க வேண்டிய உங்கள் பாதை பல்வேறு பகுதிகளிலிருந்தும் அச்சுறுத்தல் காரணமாக இருண்டதாகிவிடும். ஆனால் ஆரியின் எண்ணங்கள், திட்டங்கள், உத்திகளை பார்க்கும்போது, அவர் ஒரு இரும்பு மனிதனை போல் உள்ளார்.

வியப்படைகிறேன்

வியப்படைகிறேன்

சிலருக்கு இது சுலபமான ஒன்றாக தெரியலாம், ஆனால் நான் அவரை பார்த்து வியப்படைகிறேன். இவ்வாறு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவை பார்த்த பலரும் உண்மைதான் என்றும் ஆரி ஒரு நல்ல மனிதர் என்றும் கூறி வருகின்றனர். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X