தனி ஒருவன் 2 படத்தில் வில்லனா மிரட்டப்போறது இவர்தானாமே.. இன்னும் பல.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக மிரட்டப் போகும் நடிகர் யார் என்பது உட்பட பல சுவாரசிய தகவல்களை வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
சினிமாவில் நடக்கும் சுவாரசிய சம்பவங்களை அவ்வப்போது டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸிலும் பல சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அதாவது, சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்திற்கும் ஓடிடி தளங்கள் கொக்கி போட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்களையும் கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை ஷில்பா மஞ்சுனாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது குறித்த தகவலை கூறியுள்ளார். அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் இலக்கியாவை சேர்ப்பது ஏன் என்பது குறித்தும் கூறியுள்ளார்.
மேலும் தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











