அந்நியன் படத்தில் சின்ன அம்பியா நடிச்சாரே விராஜ்.. இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் சட்டென நாட்டாமை படத்தில் நடித்த அந்த மிக்சர் தின்னி எப்படி பதிந்து விட்டாரோ அதே போல பல்வேறு ஒன் டைம் வொண்டர்கள் வந்து செல்வது வழக்கம். அந்நியன் படத்தில் சிறு வயது அம்பியாக நடித்த குழந்தை நட்சத்திரம் விராஜ் தற்போது பெரிய நடிகராகவே மாறிவிட்டார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்திலும் இளைஞராக பீச்சில் கிரிக்கெட் விளையாடி சிவாவோட டீமை தோற்கடித்து விட்டு அந்த பேட்டை புடிங்கிட்டுப் போகும் காட்சியிலும் இவர் தான் நடித்திருப்பார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ள அவரை நெட்டிசன்கள் தற்போது அடையாளம் கண்டு அந்த சின்ன அம்பியா இவர் என சோஷியல் மீடியாவில் போஸ்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
யாருடைய மகன் தெரியுமா?: நடிகர் மோகனுக்கு குரல் கொடுத்து வந்த சுரேந்தரின் மகன் தான் இந்த விராஜ். ஹரி பிரசாந்த் என்கிற பெயரை விராஜ் என மாற்றிக் கொண்டிருக்கிறார். நடிகர் விஜய்யின் மாமா தான் சுரேந்தர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். விஜய்யின் மச்சான் தான் இந்த சுரேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டு வெளியான உயிரிலே கலந்தது படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமாகி உள்ளார்.

சின்ன அம்பி: உயிரிலே கலந்தது, உன்னை நினைத்து, தித்திக்குதே உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், அதன் பின்னர், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம், சதா நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் இளம் வயது அம்பியாக விராஜ் நடித்திருப்பார். சிறு வயதில் கருடப் புராணம் கதைகளை கேட்டும் தனது தங்கை மரணத்திற்கு பிறகு சட்டம் ஒழுங்கை சரியாக கடை பிடிக்காதவர்கள், அலட்சியமாக நடப்பவர்களை அந்நியனாக விக்ரம் தேடி தேடி கொள்வார். அவருடைய ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அம்பியாக செம க்யூட்டாக இவர்தான் நடித்திருப்பார்.

சென்னை 28 இரண்டு பாகங்களிலும்: சென்னை 600028 படத்தின் மூலம் பிரபல இயக்குநராக வெங்கட் பிரபு மாறினார். அந்த படத்தில் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு பீச்சில் கிரிக்கெட் விளையாடி ஜெயித்து விட்டு பேட்டை புடுங்கி செல்லும் அணியின் கேப்டனாக விராஜ் தான் நடித்திருப்பார். இரண்டு பாகங்களிலும் நடித்த அவர் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
மிஷன் சாப்டர் 1 வில்லன்: ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நிமிஷா சஜயனின் உறவினராகவும் காசு கேட்டுத் தொல்லைக் கொடுக்கும் தாமஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். படம் வந்தபோது கூட இவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுக் கொள்ளாத நிலையில், ஓடிடியில் வெளியான நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் இவர்தான்ப்பா அந்த அம்பியா நடிச்ச பையன் என அடையாளம் கண்டு பதிவுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











