twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று பிக் பாஸ் 3 வீட்டிற்கு புதுசா யாரோ வராங்க: ஒரு வேளை 'அவரா' இருக்குமா?

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் 3 வீட்டிற்கு யாரோ புதுசா வருகிறாங்க போலயே என்று கூறி ப்ரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி இன்னும் சண்டை சச்சரவு எதுவும் ஏற்படவில்லை. மாறாக காதல், யாருமே இல்லையே என்ற ஃபீலிங் காட்சிகள் தான் நடந்துள்ளது.

    நிகழ்ச்சி துவங்கிய முதல் நாள் காதல், மறுநாள் விருந்தாளி என்று ஆரம்பத்திலேயே படுவேகமாக இருக்கிறார் பிக் பாஸ். இருக்காதா, நிகழ்ச்சி துவங்கி 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் மொக்கை என்று விமர்சனம் வருவதால் பிக் பாஸ் அவசரப்பட்டே ஆக வேண்டிய நிலையில் உள்ளார்.

    பிக் பாஸ் 3: பர்ஸ்ட் ஒன்சைட்.. அடுத்து டபுள்சைட்.. இப்போ கவின் - அபியை வச்சு வேற லெவல் பிளான்! பிக் பாஸ் 3: பர்ஸ்ட் ஒன்சைட்.. அடுத்து டபுள்சைட்.. இப்போ கவின் - அபியை வச்சு வேற லெவல் பிளான்!

    யுத்தகளம்

    தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் சாக்ஷி, ஷெரின், அபிராமி ஆகியோர் பாப்பா பாடும் பாட்டு என்று கூட்டாக சேர்ந்து பாடுகிறார்கள். ஒன்னு சேர்ந்துவிட்டீர்கள் அல்லவா, நிச்சயம் பிரித்துவிடுவார்கள். அமைதியா, சந்தோஷமா இருக்கும் குடும்பம் எப்பொழுது யுத்தகளத்தை பார்க்கப் போகிறது என்று தெரியவில்லை என்கிறார் சாண்டி. அடுத்த வாரத்தில் இருந்து யுத்தகளமாக மாறும் என்று நினைக்கிறேன். அந்த யுத்தத்தில் நானும் இருப்பேன்னு நினைக்கிறேன் என்று கெத்தா பேசிவிட்டு அண்ணா நான் பண்ணலனா ஏரியாவில அந்த பையன் தான் அண்ணா கூப்பிட்டான் என்று ப்ரொமோ வீடியோவில் பம்முகிறார் சாண்டி.

    சாண்டி

    சாண்டி

    பிக் பாஸ் சும்மா, சும்மா சாண்டியையே பேசவிட்டு எரிச்சலை கிளப்பாதீங்க. ஒரு மணிநேரம் முழுசா நிகழ்ச்சியை பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்லை. அந்த அளவுக்கு ஆரம்பமே கொடூர மொக்கையாக உள்ளது. சும்மா சும்மா காதல், கிரஷ்னு எத்தனை நாள் தான் வேடிக்கை காட்டுவீர்கள். ஏதாவது மாத்தி யோசிங்க பிக் பாஸ் என்று அதற்குள் விமர்சனம் எழுந்துவிட்டது.

    விளாசல்

    பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை விடுங்க ப்ரொமோ வீடியோக்களை பார்த்தே ரசிகர்கள் என்ன கருமம்டா என்று கேட்டு கோபப்படுகிறார்கள். வழக்கமாக ப்ரொமோ வீடியோக்கள் தான் பரபரப்பாக இருக்கும். இந்த சீசனில் அது கூட மொக்கை போடுதே. இப்பவே கண்ணை கட்டுதே, இன்னும் 98 நாள் வேறயா?

    பவர் ஸ்டார்

    இன்று பிக் பாஸ் வீட்டிற்கு யாரோ வருகிறார் போல என்பதை பார்த்ததும் ஒரு வேளை பவர் ஸ்டாரா இருக்குமோ, சாந்தினி தமிழரசனா இருக்குமோ என்று ஒரு கூட்டம் யூகிக்கத் துவங்கிவிட்டது. யார் வந்தால் எனக்கென்ன, ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களே முத்தின கேசா இருக்கிறாங்க என்று ஒரு கோஷ்டி அலுத்துக் கொள்கிறது. ப்ரொமோ வீடியோவை நம்ப முடியாது பாஸ். இது ஏதாவது ஏமாத்து வேலையாக கூட இருக்கும் என்கிறார்கள் சிலர்.

    English summary
    Bigg Boss is under extreme pressure to make the programme interesting. Looks like someone is coming to the house tonight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X