பிக் பாஸ் 2 டைட்டிலை வெல்லப் போவது யார்?: ஆர்த்தி கணிப்பு
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 டைட்டிலை வெல்லப் போவது யார் என்று முன்னாள் போட்டியாளரான ஆர்த்தி கணித்துள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் நேற்று கமல் தாளிச்சதை பார்த்து சந்தோஷப்படாத பார்வையாளர்களே இல்லை. அவர் மகத், ஐஸ்வர்யா, யாஷிகாவுக்கு டோஸ் விட்டதை கேட்கவே சிறப்பாக இருந்தது.
இந்நிலையில் பிக் பாஸ் 2 டைட்டிலை வெல்லப் போவது யார் என்பது குறித்து ட்வீட்டியுள்ளார் முன்னாள் போட்டியாளரான ஆர்த்தி.
மும்தாஜ்
மும்தாஜ் அல்லது சென்றாயன் தான் பிக் பாஸ் 2 டைட்டிலை வெல்வார்கள் என்று நானம் நம்புகிறேன். நான் ஒரு பெண்ணாக இருப்பதால் மும்தாஜுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன். ஆண்டவன் அருளுடன் பயணிக்க வாழ்த்துக்களும், துவாவும் என்று ட்வீட்டியுள்ளார் ஆர்த்தி.
நெட்டிசன்
ஆர்த்தியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன் ஒருவர் டைட்டிலை வெல்லும் அனைத்து தகுதியும் ரித்விகாவுக்கு தான் உள்ளது என்று கமெண்ட் போட்டார். அந்த கமெண்ட்டை பார்த்த ஆர்த்தி பதில் அளித்துள்ளார்.
ரித்விகா
ரித்விகா எனக்கு நல்ல தோழி. அமைதியாக தெளிவாக இருக்கிறார். ஆரம்பத்தில் அவர் வாரக்கணக்கில் சக போட்டியாளர்களை கவனித்து சேஃபாக விளையாடினார். ஆனால் முதல் நாளில் இருந்து மும்தாஜ் ஃபுல் எனர்ஜியுடன் உள்ளார். அவர் எப்பொழுதும் சேஃபாக விளையாட வில்லை. மேலும் யாரையும் சார்ந்து இல்லை என்று பதில் அளித்துள்ளார் ஆர்த்தி.
சேஃப்
ஆர்த்தி சொல்வதும் உண்மை தான். ரித்விகா வாய் திறந்து பேசவே பல வாரங்கள் ஆனது. தற்போதும் அவ்வப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











