ஆண்களே தேவையில்லை.. லெஸ்பியனாக மாறிவிட்டாரா பிரபல நடிகை.. திடீர் போஸ்ட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஸ்பெயின்: இங்கிலாந்தின் ஹாட் டாப் மாடலான டெமி ரோஸ், இனி ஆண்கள் யாருக்கு வேண்டும் என போஸ்ட் போட்டு தனது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார்.
ஹாலிவுட் நடிகை, இன்ஸ்டாகிராம் மாடல், உள்ளாடை விளம்பரங்கள் என பிசியாக இருக்கும் டெமி ரோஸ், தற்போது ஸ்பெயினில் உள்ள சொர்க்கபுரியான இபிசா கடற்கரை தீவில் தனது ஹாலிடேவை உல்லாசமாக கொண்டாடி வருகிறார்.
அதுவும் தனது தோழி ஒருவருடன் என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயமே..

இரண்டு வருஷம் டேட்டிங்

இரண்டு வருஷம் டேட்டிங்

கடந்த 2017ம் ஆண்டு சர்வதேச அளவில் பிரபலமான டிஜே கிரிஸ் மார்டினஸை காதலித்து வந்தார் டெமி ரோஸ். தாராளமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை பதிவிடும் டெமி ரோஸுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். 2017ம் ஆண்டு தொடங்கிய இவரின் காதல் கதை மேட்ரிட் விமான நிலையத்தில் முத்த மழையெல்லாம் பொழிந்த நிலையில், கிட்டத்தட்ட ஒன்றாக 2 ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்தார்.

பிரேக்கப்

பிரேக்கப்

இளம் மாடல் அழகியான டெமி ரோஸ், இங்கிலாந்தில் இருந்து ஹாலிவுட் நடிகையாக வேண்டும் என்ற கனவோடு, லாஸ் ஏஞ்சல்ஸில் புதிதாக வீடு வாங்கி குடிபுகுந்தார். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்கவும் ஆடிஷன்கள் சென்றுள்ளார். எண்ட் டைம் எனும் படத்தில் நடித்துள்ள இவர், லவ் செட்டாகாத நிலையில், கடந்த ஆண்டு காதலர் கிரிஸ் மார்டினஸை விட்டு விலகினார்.

மேஜிக் தீவு

மேஜிக் தீவு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் லாக்டவுனில் இருந்து வந்த டெமி ரோஸ், லாக்டவுன் தளர்வு காரணமாக ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா எனும் கடற்கரை தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். உள்ளாடை விளம்பரங்களையும் கூடவே செய்து வரும் டெமி ரோஸ், அந்த மேஜிக் ஐலாண்டில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இளைஞர்களை ஜில் ஆக்கி வருகிறார்.

ஆண்களே தேவையில்லை

ஆண்களே தேவையில்லை

எப்பவுமே சோலோ பெர்ஃபார்ம் செய்து வரும் டெமி ரோஸ், திடீரென தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் தோழி ஒருவருடன் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். மேலும், அந்த புகைப்படத்து கூடவே, "Who needs men anyway?" என்ற கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

லெஸ்பியன் ஆகிட்டீங்களா?

லெஸ்பியன் ஆகிட்டீங்களா?

லவ் பிரேக்கப் ஆன நிலையில், ஆண்கள் மீது நம்பிக்கையே போய் விட்டது என சில மாதங்களுக்கு முன்னதாக டெமி ரோஸ் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், இப்படியொரு கேப்ஷனை அவர் போட்டதை பார்த்த ரசிகர்கள், லெஸ்பியனாகவே மாறிட்டீங்களா? என்றும், உங்களை நல்லா பார்த்துக்க எங்களை மாதிரி நிறைய இளைஞர்கள் இருக்கிறோம் மோசம் செய்து விடாதீர்கள் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X