பராசக்தி படத்தில் அய்யாக்கண்ணு கேரக்டரில் நடித்தது அந்த இன்ஸ்டா பிரபலமா?.. வீட்டில் சோகம்.. ரொம்ப பாவம்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் கடந்த பத்தாம் தேதியிலிருந்து திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தையே பெற்றுவருகிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் அய்யாக்கண்ணு கேரக்டரில் நடித்தவர் குறித்து தெரியவந்திருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பிருத்வி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் பராசக்தி. ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவர்கள் போராட்டத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்தார் இயக்குநர். இதனால் சென்சாரில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்தது படம். மொத்தம் 25 இடங்களில் கட் மற்றும் மியூட்டை போட சொல்லிவிட்டார்கள் அதிகாரிகள். அனைத்தையும் ஏற்றுக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்தது படக்குழு.
நல்ல ரெஸ்பான்ஸ்: படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. உணர்வுப்பூர்வமான கதையை பக்கா கமர்ஷியலாகவும் தர மறக்கவில்லை இயக்குநர் என புகழாரம் சூடுகிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் சக்கைப்போடு போட்டுவரும் படம்; இதுவரை இந்தியாவில் 20 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். உலக அளவில் முதல் நாளிலேயே 27 கோடி ரூபாய் அள்ளியிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

எல்லா கேரக்டர்களுக்கும் இடம்: பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மட்டுமின்றி முக்கியமான ரோலில் நடித்த பலருக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. முக்கியமாக அய்யாக்கண்ணு என்ற கேரக்டர் படத்தில் முக்கியமான இடத்தில் வருகிறது. அதில் நடித்தவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பிரபலமான கஜேந்திரன் என்பவர். இவர் காதல் தொடர்பான ரீல்ஸ்களை அதிகம் போடுபவர். இப்போது பராசக்தி படத்தில் அவர் ஏற்றிருக்கும் அய்யாக்கண்ணு கேரக்டர் மேற்கொண்டு அவருக்கு பெயரை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
வீட்டில் நடந்த துக்கம்: இந்நிலையில் படம் ரிலீஸாகும் மூன்று நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் சோகமான விஷயம் நடந்திருக்கிறது. அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில், "எனது அம்மா கடந்த ஆறாம் தேதி உயிரிழந்தார். நான் சினிமாவில் நடிப்பதை பார்ப்பதற்காக அவர் பத்து வருடங்கள் காத்திருந்தார். பராசக்தி ரிலீஸுக்கு தயாராக இருந்த நேரத்தில்தான் ஒரே இரவில் எனது குடும்பத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அவர் எப்போதும் என்னுடன் இருப்பார் என நம்புகிறேன்.
எப்போதும் மறக்கமாட்டேன்: என் மீது நம்பிக்கை வைத்து எனது வாழ்க்கையை மாற்றியமைக்கும் வாய்ப்பை வழங்கிய சுதா கொங்கராவுக்கு நன்றி. இந்த வாழ்நாள் வாய்ப்பை எப்போதும் மறக்கமாட்டேன். சிவகார்த்திகேயனின் தீவிரமான ரசிகன் நான். இதற்கு முன்பு டான் படத்தில் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றினேன். உங்களுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு மற்றொரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். அப்போதுதான் சுதா மேடம் எனது கனவை நனவாக்கினார். ஷூட்டிங்கில் எனக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











