நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக முதலில் தகவல் பரப்பியது இந்த பிரபலம் தான்!

சென்னை: நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதாக முதலில் கூறிய பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை தொடர்களின் மூலம் பெரும் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அற்புதமான பர்ஃபாமன்ஸை கொடுத்து பிரமிக்க வைத்து விடுவார்.

கோவை அனுராதா, கே பாலச்சந்தர், சுந்தர் கே விஜயன், பத்ரி உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் சீரியல்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர்.

ராதிகாவின் சீரியல்

ராதிகாவின் சீரியல்

இவர் நடித்த காசளவு, காதல் பகடை, அலைகள், ஆடுகிறான் கண்ணன் உள்ளிட்ட பல சீரியல்கள் பெரும் வெற்றி பெற்றன. இதேபோல் நடிகை ராதிகாவின் செல்வி, அரசி, வாணிராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் வேணு அரவிந்த்.

பகல் நிலவு..

பகல் நிலவு..

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார் வேணு அரவிந்த். முத்து எங்கள் சொத்து படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் வேணு அரவிந்த். தொடர்ந்து பகல் நிலவு, படிக்காத பண்ணையார், இனியவளே, அலைபாயுதே, என்னவளே, நரசிம்மா, வல்லவன், நாளைய பொழுதும் உன்னோடு வேகம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நிமோனியா காய்ச்சல் பாதிப்பு

நிமோனியா காய்ச்சல் பாதிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வேணு அரவிந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டது. ஆனால் இரண்டிலிருந்தும் மீண்டு விட்டதாக தகவல் வெளியானது.

கோமாவில் வேணு அரவிந்த்?

கோமாவில் வேணு அரவிந்த்?

இந்நிலையில் சமீபத்தில் மூளையில் நடந்த அறுவை சிகிச்சையால் தற்போது மருத்துவமனையில் கோமாவில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனைக் கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவருக்கு நெருக்கமான திரை பிரபலங்கள் வேணு அரவிந்த் நலமுடன்தான் இருக்கிறார் என்று கூறினர்.

நடிகை ராதிகா மறுப்பு

நடிகை ராதிகா மறுப்பு

அவர் கோமாவில் இல்லை என்று கூறி மறுப்பு தெரிவித்து வந்தனர். மேலும் ஊடகங்கள் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். நடிகை ராதிகாவும் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக வெளியான தகவலை மறுத்து டிவிட்டரில் பதிவிட்டார்.

தவறான செய்திகளை நிறுத்துங்கள்

தவறான செய்திகளை நிறுத்துங்கள்

வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. அவரது உடல்நலம் குறித்து அவரது மனைவியுடன் பேசி வருகிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்தார். ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் ஆரோக்கியமாக மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்திப்போம். தவறான செய்திகளை நிறுத்துங்கள் என கூறியிருந்தார்.

தொகுப்பாளர் விஜய சாரதி

தொகுப்பாளர் விஜய சாரதி

இந்நிலையில் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக முதலில் செய்தி வெளியிட்ட பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரபல தொகுப்பாளரும் நடிகருமான விஜய சாரதிதான் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக செய்தி பரப்பியதாக தெரிகிறது.

அவரை காப்பாற்றுங்கள்

அவரை காப்பாற்றுங்கள்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நடிகர் வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கோமாவில் உள்ளார். அவருக்கு இப்போது என்ன உதவி கிடைத்தாலும் அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். தயவுசெய்து ஒரு உதவியை செய்து அவரை காப்பாற்றுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் கேட்ட பாடல்

நீங்கள் கேட்ட பாடல்

மேலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆகியோரின் டிவிட்டர் ஹேண்டில்களையும் குறிப்பிட்டுள்ளார். விஜய சாரதி, சன் டிவியில் ஒளிபரப்பான நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X